| வருந்தும் திரள்கொங்கை மங்கையை வாட்டினை வானகத்தே திருந்துந் திரள்முகில் முந்திவந் தேறுதிங் கட்கொழுந்தே. |
திருச்சிற்றம்பலம்
பற்றி நகைப்பிற்கு உவமையாயிற்று. தரளம் முத்து, வண்ணம் - அழகு. கொய்தல் மலருக்கு அடை. யாவராலும் விரும்பிக் கொய்யப்படுகின்ற மலர் செந்தாமரை மலர். அதில் வீற்றிருப்பவள் இலக்குமி. இங்கு வீர லக்குமியைக் கொள்க. அமணரை வென்ற வெற்றி பற்றி ஞானசம்பந்தரை வீரலக்குமி பொருந்திய புயம் உடையவராகக் கூறினார். தாமரைக் கா - தாமரை மாலையைப் பெறுதற்காக. 'முகில்களுக்கு முந்தி வந்து எழுகின்ற திங்கட் கொழுந்து' என்க. "கொழுந்து" என்றதனால் இஃது அந்திப் பிறையாயிற்று. எனவே, தலைவியின் பொருட்டுச் செவிலி பொழுதுகண்டு இரங்கிக் கூறியதாயிற்று "திங்கட் கொழுந்தே! மங்கையை வாட்டினை; (இது விசும்பில் இயங்கும் உனக்கு நன்றோ)" என முடிக்க. ஈற்றில் வருவித்தது குறிப்பெச்சம். இப்பாட்டின் இறுதி முதற்பாட்டில் சென்று மண்டலித்தல் காண்க. ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை முற்றிற்று.
|