பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை910

நம்பியாண்டார் நம்பிகள்
அருளிச் செய்த

37. ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை

கலி வெண்பா
திருச்சிற்றம்பலம்

1324
1திருந்திய செந்தா மரைத் தடத்துச் சென்(று) ஓர்
இருந் தண் இளமேதி பாயப், - பொருந்திய

தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ‘உலா’ என்பதொன்று. இது பற்றிய குறிப்புத் தொல்காப்பியத்திலும் உண்டு.1

“பாட்டுடைத் தலைவன் பல சிறப்புக்களுடன் வீதியுலாப் போதுங்கால், அவ்வீதிகளில் உள்ள பேதை முதலிய எழுவகைப் பருவத்து மகளிரும் அவனைக் கண்டு காதலித்து, அவன் காதலியாமையால் வருந்திச் சோரப் போதந்தான்” - என்னும் பொருள் அமைதியோடு இது பாடப்படும். ‘புற உலா’ என்னும்பொருளில் இது ‘உலாப்புறம்’ - என்றும் சொல்லப்படும். அப்பிரபந்தத்தை இங்கு ஆசிரியர் நம்பியாண்டார் நம்பிகள் திருஞான சம்பந்தருக்கு உரித்தாகப் பாடுவார் ஏழு பருவத்து மகளிர் செயலை ஏனைய உலாக்களில் போல விரித்துக் கூறாமல் தொகுத்துச் சில அடிகளில் பெற வைத்து, ஞானசம்பந்தரது செயல்களையே அடைவாகக் கூறுதலால், இதனை ‘உலா’ என்று மட்டும் குறியாது “உலா மாலை” - எனக் குறித்தார். யாப்பு, உலாக்களின் இயல்புபடி கலி வெண்பாவாகவே உள்ளது.

1324. கண்ணி 1 முதல் 58 முடியச் சீகாழித் தலச் சிறப்பே சொல்லப்படுகின்றது.

முதற் பத்துக் கண்ணிகள் சீகாழியின் வயற் சிறப்பைக் கூறும், இவ் வயல்கள் இடையிடையே சிறு குளங்களைக் கொண்டிருத்தலால், அக்குளங்களின் வளப்பங்களும் ஒன்று பட்டு வயலின் வளப்பங்களாகவே காட்சி யளிக்கின்றன. (கண்ணி-1) தடம் - பெரிய குளம். மேதி - எருமை. (கண்ணி-2) பொருந்தியபுள். நீரிலே மூழ்கி வாழும் பறவைகள். (கண்ணி-3) குருகு - நீர்க் கரையில் வாழும்


1. பொருள் - புறத்திணையியல் - பாடாண்.