2. | புள் இரியப், பொங்கு கயல்வெருவப், பூங்குவளைக் | | கள் இரியச், செங்கழுநீர் கால்சிதையத், - துள்ளிக் |
3. | குருகிரியக், கூன்இறவம் பாயக், கெளிறு | | முருகுவிரி பொய்கையின்கண் மூழ்க. -வெருவுற்றுக் |
4. | கோட்டகத்துப் பாய்வாளை கண்டலவன் கூசிப் போய்த் | | தோட்டகத்த செந்நெல் துறைஅடையச், -சேட்டகத்த |
5. | காவி முகம்மலரக், கார்நீலம் கண்படுப்ப, | | ஆவிக்கண் நெய்தல் அலமர, -மேவிய |
6. | அன்னம்துயில்இழப்ப, அம்சிறைசேர் வண்டினங்கள் | | துன்னும் துணைஇழப்பச் சூழ் கிடங்கின் -மன்னிய |
7. | வள்ளை நகைகாட்ட, வண்குமுதம் வாய்காட்ட, | | தெள்ளுபுனற் பங்கயங்கள் தேன்காட்ட, - மெள்ள |
8. | நிலவுமலரணையினின்றிழிந்த சங்கம் | | இலகுகதிர்நித்திலங்கள் ஈன, - உலவிய |
பறவைகள். இரிதல் - அஞ்சி நீங்குதல். கால் - பூக்களின் காம்பு. இறா - இறால் மீன். இஃது ‘இறவு’ என்று ஆகிப் பின் அம்முப் பெற்றது, கெளிறு - ஒருவகை மீன், ‘களிறு’ என்பது பாடம் அன்று. முருகு - தேன்; நறுமணமுமாம். ‘முருகோடு விரி’ என மூன்றன் உருபு விரிக்க. விரிதலுக்கு ‘மலர்கள்’ என்னும் எழுவாய் வருவிக்க. (கண்ணி-4) கோட்டகம் - கரை; (குளக்கரை) அலவன் - நண்டு. தோடு - இலை. ‘தோட்டின் அகத்திலே உள்ள நெல். நெல் - நெற் கதிர். ‘அலவன் போய் நெல் துறையை அடைய’ என்க. சேடு - அழகு. அகம் - உள்ளிடம். ‘அழகை அகத்திலே உடைய காவி’ என்க. (கண்ணி-5) காவி, இங்குச் செந்நிறம். இஃது பெயராய்ச் செந்தாமரை மலரைக் குறித்தது. கார் நீலம் - கரிய நீலோற்பவ மலர். படுப்ப - பொருத்துவித்து. செந்தாமரை மலர் முகம் போல விளங்குவதையும், நீலோற்பவ மலர் அம்மலரிற் பொருந்துதலையும், “முகம்மலர்” எனவும் “கண்ணைப் பொருத்துவிக்க” எனவும் கூறிய ஏற்றுரை (இலக்கணை) வழக்கு. ஆவி - வாவி; சிறுகுளம். (கண்ணி-6) கிடங்கு - வயலுள் அகழப்பட்ட வாய்க் கால். (கண்ணி-7) வள்ளை - வள்ளைத் தண்டு. இது நீரில் மிதப்பது. இது காதிற்கு உவமையாக வருமாயினும், ஆம்பல் மலரோடு சேர்ந்தமையால் நகைப்பிற்கு உவமையாயிற்று. “தேன் காட்ட” என்பதில் “காட்ட” என்பதில் “காட்ட” என்பது ‘சொரிய’ எனப் பொருள் தந்தமையின், சொற்பின்வருநிலை அணியாயிற்று. (கண்ணி-8) மல் - வளம். ஐ,
|