9. | மல்லைப்பழனத்து வார்பிரசம் மீதழிய | | ஒல்லைவரம்பிடறி ஓடிப்போய்ப் - புல்லிய |
10. | பாசடை, அச்செந்நெற் படர் ஒளியால் பல்கதிரோன் | | தேசடைய ஓங்கும் செறுவுகளும், -மாசில்நீர் |
சாரியை. பழனம் - பண்ணை. வார் பிரசம் - ஒழுகுகின்ற சாறு. இது வாழை, கரும்பு இவற்றினின்றும் ஒழுகுவது. ஒல்லை - வேகமாக. வரம்பு - வரப்பு. ‘பிரசம்வரம்புமீது அழிய இடறி ஓடிப் போய்ப்புல்லிய அடை’ மலிக. புல்லிய - பொருந்திய (கண்ணி-10) பசுமை + அடை = பாசடை. பச்சையிலை, அச் செந்நெல் - மேற் கூறப்பட்ட செந்நெல், பல் கதிரோன், சூரியன். தேசு - ஒளி. செறு - வயல், இஃது ஈற்றில் உகரம் பெற்றது. செந்தாமரை மலர்களையுடைய பெரிய குளத்தில் இளமை வாய்ந்த எருமை சென்று பாய்ந்தமையால் அக்குளத்தின் நீரிலே வாழ்ந்திருந்த பறவைகளும், கரையிலே இருந்த பறவைகளும் அஞ்சி ஓடின. கயல்மீன்கள் அச்சம் கொண்டும் போக வேறு வழியின்றி இருந்தன. குவளை மலர் சிதைதலால் அதனின்றும் தேன் ஒழுகியது. செங்கழுநீர்ப் பூத் தன் காம்பு வேறாக வேறுபட்டது. இவை எருமை பாய்ந் தமையால் ஒருங்கு நிகழ்ந்தவை. இனி, அவ் எருமை பாய்தலால் இறால் மீன்கள் அங்கும் இங்குமாகப் பாய்ந்தன. கெளிற்று மீன்கள் மேல் எழாது நீர்க்கு அடியிலே இருந்தன. இயல்பிலே மிக மேலே துள்ளுவதாகிய வாளைமீன் துள்ளிக் கரையிலே பாய்ந்தது. இவை மேற்கூறிய காரணத்தால் தனித்தனி நிகழ்ந்தவை. வாளைமீன் கரையிலே பாய்ந்ததைக் கண்டு அங்கிருந்த நண்டுகள் மனம் வருந்தி நெற்பயிர் உள்ள இடத்தை அடைந்தன. வாளை மீன் தங்கள் மேல் பாயாது கரைமேல் பாய்ந்ததைக் கண்டு அச்சம் நீங்கிச் செந்தாமரை முகம் மலர்ந்தது; நீலோற்பவம் கண் விழித்திருந்தது. நெய்தல் ஒன்றும் விளங்காமல் சுற்றும், முற்றும் பார்த்தது. ஆயினும் வாளைமீன் கரையிற் பாய்ந்த அதிர்ச்சியால் அன்னம் துயில் ஒழிந்தது. ஆண் வண்டு பெண் வண்டினை விட்டு ஓடிற்று. இவைகளையெல்லாம் கண்டு குமுதம் சிவந்த வாயின்கண் பற்கள் தோன்ற நகைத்தது. இவை யெல்லாம் வாளை கரையிற் பாய்ந்தமை யால் செயற்கையாக நிகழ்ந்தன. இந்நிலையில் இயற்கையாகச் செந்தாமரை மலராகிய படுக்கையில் படுத்திருந்து, கரு உயிர்க்கும் வேதனையால் கீழே இறங்கி முத்தை ஈன்றது. இங்ஙனம் உள்ள பொழுது வாழைப் பழச் சாறும், கரும்பின் சாறும் தாமாகவே வழிந்து ஓடி, வயல் வரப்புக்களை அழித்துச் சென்று வயல்களில் உள்ள தாமரையிலை
|