பக்கம் எண் :

913ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை

11.நித்திலத்திற் சாயும் நிகழ்மரக தத் தோலும்
தொத்தொளி செம்பொன் தொழிற்பரிய -மொய்த்த

12.பவளத்தின்செவ்வியும் பாங்கனைய ஓங்கித்
திவளக் கொடிமருங்கிற் சேர்ந்துதித் -துவளாமைப்

13.பட்டாடைகொண்டுடுத்துப் பைந்தோ(டு) இலங்குகுழை
இட்டமைந்த கண்ணார் இளங்கமுகும், -விட்டொளிசேர்

14.கண்கள்அழல்சிதறிக் காய்சினத்த வாய்மதத்துத்
தண்டலையின்நீழல் தறிஅணைந்து - கொண்ட

15.கொலைபுரியா நீர்மையவாய்க் கொம்புவளைத் தேந்து
மலையும் மரவடிவம் கொண்டாங்(கு) - இலை நெருங்கு


மேல் தேங்கிநின்றன. அத்தேனின் மேல் செந்நெற்களின் ஒளி வீழ்ந்தமையால் தாமரை யிலை சூரியனைப் போல விளங்கிற்று.

இத்தகைய வளப்பங்களை யுடையன காழி நகரைச் சூழ்ந்த வயல்கள்.

கண்ணி - 11, 12, 13 கமுக மர வருணனை :- கமுகங்காய் முற்றாது இளம் பிஞ்சாய் இருக்கும் பொழுது முத்துப் போல விளங்கும். இங்கு, “காய்” என்றது, பிஞ்சினை. நீர், நித்திலத்திற்கு அடை. நித்திலக் காய் உவமத் தொகை. இன், வேண்டா வழிச் சாரியை. மரகதம் போலும் தோல், கமுக மரத்தின் தோல். முற்றிப் பழுத்த கமுகங்காய் பவளம்போலச் சிவந்திருக்கும். தொத்து ஒளி - திரளாகிய ஒளியை உடைய (பவளம்), செம்பொன் தொழில் பரிய - செவ்விய பொன்னின் வேலைப் பாட்டோடு கூடிய பருத்த (பவளம்). செவ்வி - அழகு. பாங்கு - உரிய இடம். கொடி திவள மருங்கில் சேர்த்தி - கொடிகளை அசையும் படி நடுவிடத்திலே சேர்த்துக் கொண்டு. துவளாமை - கொடிகள் துவளாதபடி. பட்டு ஆடை - பட்டுப் பூச்சிகள் ஆக்கிய பட்டாகிய ஆடை. “தோடு, குழை” இவை அணிகல வகைகளையும், பூவிதழ், இளந்தளிர் என்பவற்றையும் குறித்துச் சிலேடையாய் நின்றன. ‘அணைந்த இளங்கமுகு, கண்ணார் இளங்கமுகு’ என நேரே ஒரு பொருளும், ‘தோடும், குழையும் அணிந்து, அவைகளில் வந்து பொருந்திய கண்களை யுடைய மகளிர்போலும் இளங்கமுகு’ மற்றொரு பொருளும் கொள்க. முதற் பொருளில், ‘கண் ஆர் - கண்ணுக்கு நிறைந்த’ என்பதாம்.

கண்ணி - 14, 15 மாமர வருணனை :- மாமரம் யானையோடு உவமிக்கப்படுகின்றது. (கண்ணி - 15) “கொம்பு வளைத்து ஏந்து மலை” - என்றது, ‘யானை’ - என்றபடி. ‘அந்த மலையும் மரவடிவத்தைக்