16. | சூதத்திரளும், தொகுகனிக ளான்நிவந்த | | மேதகுசீர்த் தெங்கின் வியன்பொழிலும், - போதுற்(று) |
17. | இனம் ஒருங்கு செவ்வியவாய் இன்தேன் ததும்பும் | | கனி நெருங்கு திண்கதலிக் காடும், -நனிவிளங்கு |
18. | நாற்றத்தால்எண்டிசையும் வந்து நலம் சிறப்ப | | ஊற்றுமடுத்த உயர்பலவும், - மாற்றமரு |
19. | மஞ்சள்எழில்வனமும், மாதுளையின் வார்பொழிலும், | | இஞ்சி இளங்காவின் ஈட்டமும், - எஞ்சாத |
கொண்டது போல விளங்குகின்றது மாமரம்’ என்பதாம். “கண்கள்” என்பதை “விட்டொளி சேர்” என்பதற்கு முன்னே கண்களில் தீப்பொறி பறக்கும்படி மிக்க சினங் கொள்ளுதல் யானைக்கு இயல்பு. மாமரத்திலும் அதன் இளந்தளிர்கள் தீப்பொறிகள் போலக் காண்ப்படுகின்றன. தீப்பொறி பறத்தலால் மதங்கொண்ட தோற்றம் உள்ளது. தண்டலை - சோலை. (கண்ணி - 14) தறி அணைதலும் யானைக்கு இயல்பு. சோலை நிழல் கட்டும் கூடம் போலவும், மரங்கள் கட்டுத் தறி போலவும் உள்ளன. ‘மாமரம் யானை போலத் தோன்றுதல் பசுமையான இலை தழைத்தலால்’ என்பது தோன்ற, “இலை நெருங்கு சூதம்” என்றார். (கண்ணி - 16) சூதம் - மாமரம். தோற்றத்தால் யானையை ஒத்திருப்பினும் பலர் சென்று தங்கும் நிழல் உடைமையால். (கண்ணி - 15) “கொலை புரியா நீர்மைய” - எனப் பட்டன. எனவே, “இவை சில அதிசய யானைகள்” என்பதாம். (கண்ணி - 16) தென்னஞ் சோலையின் சிறப்பு:- நிவந்த - உயர்ந்த. “கனிகளான்” என்னும் ஆன் உருபு ஒடு உருபின் பொருளில் வந்தது. மேதகு - மேன்மை தக்கிருக்கின்ற. வியன் - அகன்ற. கண்ணி - 17 வாழைத் தோட்டச் சிறப்பு:- போது - பூ; வாழைப் பூ. இனம் ஒருங்கு செவ்விய ஆய் - தன் இனம் முழுதும் குலையை யீனும் பருவம் உடையவாய். “செவ்விய” என்னும் பன்மை இனத்துக்கண் உள்ள பொருள்நோக்கி வந்தது. கதலி - வாழை. கண்ணி - 18 பலாத் தோப்பின் சிறப்பு:- கனி விளங்கு நாற்றம் - பழத்தினின்றும் வெளிப்படுகின்ற நறுமணம். ஊற்று - பலாச் சுளையின் சாற்றின் சுரப்பு. மடுத்த - நிலத்தை மூடிய. பலவு - பலா மரம். கண்ணி - 19 மஞ்சள், மாதுளை, இஞ்சி - இத்தோட்டங் களின் சிறப்பு:- மாற்றம் அரு - சொல்லுதற்கு அரிய. இளங் கா - இளமரக் கா. ஈட்டம் - தொகுதி.
|