பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை916

27.முளைநிரைத்து, மூரிச் சிறைவகுத்து, மொய்த்த
புளகத்தின் பாம்புரிசூழ் போகி, - வளர

28.இரும்பதணம் சேர இருத்தி, எழில் நாஞ்சில்
மருங்கணையஅட்டாலை யிட்டுப், - பொருந்திய

29.தோமரமும், தொல்லைப் பொறிவீ சியந்திரமும்
காமரமும், ஏப்புழையும் கைகலந்து - மீ மருவும்

30.வெங்கதிரோன் தேர்விலங்கு மிக் குயர்ந்த மேருப் போன்னு
அங்கனகத்(து)இஞ்சி அணிபெற்றுப் - பொங்கொளிசேர்

31.மாளிகையும், மன்னியசீர் மண்டபமும், ஒண்தலத்த
சூளிகையும் துற்றெழுந்த தெற்றிகளும் - வாளொளிய
 

கண்ணி - 27 - 30 மதிலின் சிறப்பு:- முளை - வில். முதலியவைகளை மாட்டி வைத்தற்குச் சுவரில் அடிக்கப்படும் முளைகள். இவை மதிலின் உட்புறத்தே இருக்கும். நிரைத்து - வரிசையாக அடித்து. மூரி - பெரிய. சிறை - சுவர்களை ஒட்டிச் சிறகுபோல உள்ள உறுப்பு. இவை பொருள்களை வைக்கப் பயன்படுவதுடன் உயர ஏறி நிற்கவும் பயன்படும். பாம்பு உரி - பாம்புத் தோல். இது, காண்பார்க்கு அச்சம் உண்டாகத் தீட்டப்படும் ஓவியம். போக்கி - சுற்றிலும் எழுதி. ‘பதணம், நாஞ்சில்’ - என்பன மதிலின் உறுப்பு வகைகள். அட்டாலை - வீரர்கள் இருக்கும் மண்டபம்.

தோமரம் - ஒரு வகைக் கதாயுதம். தொல்லை - பழமை. பொறி - பகைவர்மேல் வீசப்படும் சில சிறு யந்திரங்கள். வீசு யந்திரம் - தாமே பிற யந்திரங்களை எடுத்து வீசும் யந்திரம். இவை யெல்லாம் பாதுகாவலுக்கு மதிலின்கண் அமைக்கப் படும். வீசு + யந்திரம் = வீ சியந்திரம்; இகரம், குற்றிய லிகரம். கா மரம் - காவடித் தண்டு. இவை வேண்டும் பொருள்களைத் தாங்கி நிற்கும். ஏ - அம்பு. ஏப்புழை அம்புக் கட்டுக்களை வைக்கும் மாடங்கள். கைகலத்தல் - ஒன்றோடு ஒன்று கலத்தல். கலந்து - கலக்கப் பெற்று. மீ - மேல் இடம். வெங்கதிரோன் - சூரியன். விலங்கு - விலகிப் போகின்ற. அம் - அழகு - கனகம் - பொன். இஞ்சி - மதில். அணி - அழகு.

கண்ணி - 31 - 34 நகரத்தில் உள்ள இடங்களின் சிறப்பு.

சூளிகை - மேல் மாடத்து நெற்றி. இது சிறிதே நிற்றற்கும், உலவுதற்கும் பயன்படும். துற்று எழுந்த தெற்றிகள் - (இட்டிகையும்,