32. | நாடக சாலையும், நன்பொற் கபோதகம் சேர் | | பீடமைத்த மாடத்தின் பெற்றியும், - கேடில் |
33. | உருவு பெறவகுத்த அம்பலமும் ஓங்கு | | தெருவு வகுத்தசெய் குன்றும் - மருவினிய |
34. | சித்திரக் காவும், செழும் பொழிலும், வாவிகளும் | | நித்திலஞ்சேர் நீடு நிலைக்களமும், - எத்திசையும் |
35. | துன்னி எழில்சிறப்பச் சோதி மலர்மடந்தை | | மன்னி மகிழ்ந்துறையும் வாய்மைத்தாய்ப் - பொன்னும் |
36. | மரகதமும்,நித்திலமும், மாமணியும் பேணி | | இரவலருக்(கு) எப்போதும் ஈந்து, - கரவாது |
37. | கற்பகமும், காருமெனக் கற்றவர்க்கும், நற்றவர்க்கும் | | தப்பாக் கொடைவளர்க்கும் சாயாத - செப்பத்தால் |
38. | பொய்ம்மை கடிந்து, புகழ்புரிந்து, பூதலத்து | | மெய்ம்மை தலைசிறந்து மேதக்கும், - உண்மை |
39. | மறைபயில்வார், மன்னு வியாகரணக் கேள்வித் | | துறைபயில்வார், தொன்னூல் பயில்வார், - முறைமையினால் |
(செங்கல்லும்) நெருங்குதலால் எழுந்த திண்ணைகள். கபோதகம் - மாடப் புறாக்கள் உலாவும் வகையில் அமைந்த மேல் உத்தரம். பீடு - பெருமை. உருவு - அழகு. அம்பலம் - சபை. செய்குன்று - கட்டு மலை. இஃது ஏறி விளையாடப் பயன்படும். இவை தெருக்களின் கோடியில் நின்று தெருக்களைப் பிரிப்பதால், “தெருவு வகுத்த செங்குன்று”. சித்திரக் கா - ஆங்காங்குப் பாவைகள் நிற்கும் சோலை. செழும்பொழில் - பாவைகள் இன்றி மரங்கள் மட்டுமே காய்களோடும் கனிகளோடும் குளிர்ந்த நிழலை யுடைய சோலை. வாவிகள் - சிறு குளங்கள். நிலைக்களம் - அமர்விடம். துன்னி - நெருங்கி. சோதி, மலருக்கு அடை. மலர் மடந்தை - இலக்குமி. வாய்மைத்து - உண்மை யாக உடையது. என்றது நகரத்தை (சீகாழியை) கண்ணி - 35 - 38 வாழ்வார் செய்யும் தான தருமங்களை நகரத்தின்மேல் வைத்துப் புகழ்தல். மாமணி - மாணிக்கம். கார் - மேகம். ‘கொடைவளர்க்கும் செப்பம்’ என்க. சாயாத - தளராத. செப்பம் - நேர்மை. புகழ் - புகழுக்கு ஏதுவான செயல்கள்; ஆகுபெயர். மேதக்கு - மேன்மை தக்கிருக்கப் பெற்று. கண்ணி - 39 - 44 சீகாழி அந்தணர்களது சிறப்பு. “பயில்வார்” முதலிய யாவும் முற்று வினையாலணையும் பெயர்கள். வியாகரணம்
|