40. | ஆகமங்கள் கேட்பார், அருங்கலைநூல் ஆதரித்துப் | | போகம் ஒடுங்காப் பொருள்துய்ப்பார், - சோகமின்றி |
41. | நீதி நிலையுணர்வார், நீள்நிலத்துள் ஐம்புலனும் | | காதல் விடுதவங்கள் காமுறு வார், - ஆதி |
42. | அருங்கலைநூல் ஓதுவார், ஆதரித்து வென்றிக் | | கருங்கலிநீங் கக்கனல்வ குப்பார்; - ஒருங்கிருந்து |
43. | காமநூல் கேட்பார், கலைஞானங் காதலிப்பார், | | ஓமநூல் ஓதுவார்க்(கு) உத்தரிப்பார், - பூமன்னும் |
44. | நான்முகனே அன்னசீர் நானூற் றுவர்மறையோர் | | தாம்மன்னி வாழும் தகைமைத்தாய், - நாமன்னும் |
- வடமொழி இலக்கண நூல். தொன்னூல் - மரபு காக்கும் நூல்கள். அவை வேதத்தின் ஆறங்க நூல்கள். கலை நூல் - அறுபத்து நான்கு கலைகளைப் பற்றிய நூல்கள் - அவை இசை, கூத்து, ஓவியம், சிற்பம் முதலியவை பற்றியன. ஆதரித்து - விரும்பி. ‘பொருளால், போகத்தை ஒடுங்காது துய்ப்பார்’ - என்க. இங்ஙனம் கூறியது, “உடாஅதும், உண்ணாதும் தம் உடம்பைச் செற்றுப்”1 பொருளைக் காக்கும் இவறன்மை உடையாரைக் கடிதற் பொருட்டு. சோகம் - துன்பம் “இன்றி உணர்வார்” என்பதை, ‘உணர்ந்து இலராவார்’ என மாற்றிக் கொள்க. ‘சோகம் - இணைப்பு’ - எனக் கொண்டு, கிடந்தவாறே உரைப்பினும் ஆம். ‘ஐம்புலனிலும்’ என ஐந்தாம் உருபு விரிக்க. ஆதி - வேதத்தின் முற்பகுதி. அது பற்றிய அருங்கலை நூல் உபாசனா காண்டம். ‘இதனை நன்கு ஓதிக் கனல் வகுப்பார்’ என்க. கனல் - முத்தீ. வகுத்தல் - வேறு வேறாக வளர்த்தல். இங்ஙனம் வளர்த்தலால் மழை பொய்யாது பொழிய, உலகில் கலி (பஞ்சம்) வாராது நீங்கும். கற்(று) ஆங்கு எரி ஓம்பிக் | கலியை வாராமே | செற்றார் வாழ் தில்லை2 |
என அருளிச் செய்தது காண்க. காமமும் உறுதிப் பொருள் களுள் ஒன்றாகலின் அது பற்றிய நூலும் வேண்டற்பால தாயிற்று. கலை ஞானம் - நூல்களால் அறிவிக்கப்படும் மெய்யுணர்வு. இதனை ‘அபரஞானம்’ என்பர். ஓம நூல் - வேதத்தின் கரும காண்டம். ‘ஓதுவார்க்கு’ என நான்கன் உருபு விரிக்க. உத்தரிப்பார் - ஐயுற்று வினாவும் வினாக்களுக்கு விடை கூறுவார். இவற்றால் எல்லாம் சீகாழி அந்தணர்கள் பிரமனுக்கு நிகராவர்.
1.நாலடி 2. திருமுறை
|