| 51. | பம்பைத் துடிஒலியும், பவ்வப் படைஒலியும் | | கம்பக் களிற்றொலியும் கைகலந்து - நம்பிய |
| 52. | கார்முழக்கம், மற்றைக் கடல்முழக்கம் போற்கலந்த | | சீர் முழக்கம் எங்கும் செவிடுபடப் - பார்விளங்கு |
| 53. | செல்வம் நிறைந்தஊர், சீரில் திகழ்ந்தஊர், | | மல்கு மலர்மடந்தை மன்னும் ஊர், - சொல்லினிய |
| 54. | ஞாலத்து மிக்கஊர், நானூற் றுவர்களூர் | | வேலொத்த கண்ணார் விளங்கும் ஊர், - ஆலித்து |
| 55. | மன்னிருகால் வேளை வளர்வெள்ளத்(து) உம்பரொடும் | | பன்னிருகால் நீரில் மிதந்தஊர், - மன்னும் |
| 56. | பிரமன்ஊர், வேணுபுரம், பேரொலிநீர் சண்பை, | | அரன்மன்னு தண்காழி, அம்பொற் - சிரபுரம் |
| 57. | பூந்தராய், கொச்சைவயம், வெங்குருப், பொங்குபுனல் | | வாய்ந்தநல் தோணிபுரம், மறையோர் - ஏய்ந்த |
மெல்லியலார் - மகளிர். பாவை - பாவைப் பாட்டு. இதனைத் திருவாசகத்துள்ளும் காணலாம். ‘பாவை நோன்புப் பாட்டு’ என்பாரும் உளர், பறை - வாத்திய வகைகள். வியன் நகரம் - அக நகர். காவலனது பறைகள் காவலை உணர்த்தலின் அவை வேறு கூறப்பட்டன. துடி - உடுக்கை. இதனையும் காவலர் கொண்டிருப்பர். பவ்வம் - கடல். பவ்வப் படை - கடல் போலும் போர்ப் படைகள். இவற்றிடையே ஒலிப்பன போர்ப் பறைகள். சில வேளைகளில் படைகள் அகநகருள்ளும் அணிவகுத்துச் செல்வது உண்டு. கம்பக் களிறு - அசைதலை யுடைய ஆண் யானைகள். கார் - மேகம். கண்ணி - 53, 54, 55 சீகாழியின் புகழ் வகை. ஆலித்து - மழை விடாது பொழிதலால் ‘இருங்கால்’ என்பதில் சந்தி ஒற்றுத் தொகுத்தலாக ‘இருகால்’ என நின்றது. இருங்கால் - பெரிய காற்று; ஊழிக் காற்று ‘இருங்காலால் (அலை வீசி) வளர் வெள்ளம்’ - என்க. உம்பர் - அண்ட முகடு. ‘அதனோடும் சேர மிதந்த ஊர்’ என்க. ‘சீகாழியின் பெயர்கள் பன்னிரண்டும் ஓரோர் ஊழியில் எய்தின’ என்றற்கு, “பன்னிருகால் மிதந்த” - என்றார். கண்ணி - 56, 57, 58 சீகாழியின் பன்னிரு பெயர்கள் இவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணம் பற்றி வந்தனமையை
|