பக்கம் எண் :

921ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை

58.புகலி கழுமலம், பூம்புறவம் என்றிப்
பகர்கின்ற பண்புற்ற தாகித் - திகழ்கின்ற

59.

மல்லைச் செழுநகரம் மன்னவும், வல்லமணர

ஒல்லைக் கழுவில் உலக்கவும், - எல்லையிலா

60.

மாதவத்தோர் வாழவும், வையகத்தோர் உய்யவும்,

மேதக்க வானோர் வியக்கவும், - ஆதியாம்

61.வென்றிக் கலிகெடவும், வேதத் தொலிமிகவும்
ஒன்றிச் சிவனடியார் ஓங்கவும், - துன்றிய

62.பன்னு தமிழ்ப்பதினா றாயிர நற்பனுவல்
மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் - முன்னிய

63.சிந்தனையால் சீரார் கவுணியர்க்கோர் சேய்என்ன
வந்தங் கவதரித்த வள்ளலை - அந்தமில் சீர்


அறிந்துகொள்க. “இற்றது” என்பதில் உள்ள ‘அது’ என்னும் பகுதிப் பொருள் விகுதியைப் “பண்பு” என்பதனோடு கூட்டி, “பகர்கின்ற பண்பது இற்றாகி” - எனக் கொள்க. இற்று - இன்னது.

கண்ணி - 59 - 63 ஞானசம்பந்தர் அவதாரப் பயன். மல் - வளப்பம். அஃது ஐகாரம் பெற்று, “மல்லை” என வந்தது. ஆதியாம் வென்றிக் கவி - தொன்று தொட்டு வெற்றி பெற்று வந்த வறுமை நல்லார் உளரேல் மழை பொய்யாது பொழியும்; மழை பொய்யாது பொழியவே வறுமை அணுகாதாம். ஒன்றி - ஒற்றுமைப் பட்டு. பனுவல் - பதிகம். “ஞானசம்பந்தர் பதினாறாயிரம் திருப்பதிகங்களை அருளிச் செய்தார்” என்பர். கிடைத்தவை முந்நூற்றெண்பத்து மூன்று திருப்பதிகங்களே. ஏனைய சிதலைவாய்ப் பட்டன. கிடைத்த திருப்பதிகங்களிலும் ஆங்காங்குச் சில பாடல்களும், பாடல்களின் அடிகளும் அவ்வாறாயின. அப்பர் சுந்தரரது திருப்பதிகங்களிலும் சிதலை வாய்ப்பட்டன பல. கவுணியர் - கவுணிய கோத் திரத்தினர்.1 ஓர் செய் - ஒப்புயர் வற்ற பிள்ளை. அங்கு - அச்சீகாழித் தலத்தில். வள்ளல் - வீடுபேற்றினைக் கொள்ளை கொள்ள விட்டவர்.2


1. புறநானூறு -கவுணியன் விண்ணந்தாயனைச் சிறப்பித்தல் இங்கு நினைக்கத்தக்கது.
2. நால்வர் நான்மணிமாலை.