பக்கம் எண் :

93பொன்வண்ணத் தந்தாதி

172.

பரமனை யே,பலி தேர்ந்துநஞ் சுண்டது; பன்மலர்சேர்
பிரமனை யே,சிரங் கொண்டுங் கொடுப்பது பேரருளாம்;
சரமனை யேயுடம் பட்டும் உடம்பொடு மாதிடமாம்
வரமனை யேகிளை யாகும்முக் கண்ணுடை மாதவனே.

4



உருவத்தோடு' என உருபு விரித்து அதனை, "பேதுறும்" என்பதனோடு முடிக்க. 'பண் களுக்கு அங்கமான (உறுப்பான) இசைகளை இனிது விளங்கப் பலர் பாட ஆடும் பரமனையே விரும்பிப் பேதுறும்' என ஒரு சொல் வருவித்து முடிக்க. இப்பாட்டுள் 'திரிபு' என்னும் சொல்லணி வந்தது.

172. பொழிப்புரை: மூன்று கண்களையுடைய, பெரியதவக் கோலத்தனாகிய சிவபிரான் அயலார் இல்லந் தோறும் சென்று இரந்த போதிலும் அவன் உண்டது நஞ்சமே. இதழ்களால் பன்மையைப் பெற்ற மலரின்கண் இருக்கும் பிரம தேவனைச் சிரம் கொய்தும் அவனுக்கு வழங்கியது பெரிய அருளே. (படைப்புத் தொழில் தொன்மையை அளித்தது.) மலர்க் கணை களை யுடைய மன்மதனை அழித்தபோதிலும் உடம்பில் இடப்பாதியாகக் கொண்டது பெண்ணையே. இனி மேலாவன மனைவியாகிய அவளே அவனுக்குத் தாயும், மகளும் ஆகிய சுற்றம்.

குறிப்புரை: 'இஃது அவன் இலக்கணம்' எனப் பழித்தல் குறிப்பெச்சம். இது பழித்ததுபோலப் புகழ்ந்தது. சத்திக்குச் சிவன் எவ்வெம் முறையனாம் என்பதை,

"எம்பெருமான் இமவான் மகட்குத்

தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன்,

தமையன்".1

என்னும் திருவாசகத்தாலும்,

தவளத்த நீறணி யும்தடந் தோள்அண்ணல் தன்னொருபா

லவள்அத்த னாம்; மகனாம் தில்லையான்.2

திருக்கோவையாராலும் அறிக. இங்ஙனம் கூறவே, இவை உலகில் உள்ள முறைபோலத் தம் பிறப்பினால் ஆகாது தமது அருள் நாடகச் செயலால் ஆவனவாதல் விளங்கும். தத்துவங்களில் சுத்த தத்துவங்கள் தோன்றுமிடத்து, பிறிதொன்றையும் நோக்காது தன்னோக்காகிய தன்னிலையில் ஒருவனேயான சிவன் உலகத்தை நோக்குங்காலத்தில் 'சிவன், சக்தி' என இரு கூறாய்ப் பரநாதமாகிய சிவன் சுத்த சிவத்தினின்றும் தோன்றித் தன்னின்றும்


1. திருப்பொற்சுண்ணம் - 13
2. பாட்டு - 112.