124. | ‘வென்றிவேற் சேய்’ என்ன, ‘வேனில் வேள் கோ’ என்ன | | ‘அன்(று)’ என்ன, ‘ஆம்’ என்ன ஐயுற்றுச் - சென்றணுகிக் |
125. | ‘காழிக் குலமதலை’ என்றுதம் கைசோர்ந்து | | வாழி வளைசரிய நின்றயர்வார் - பாழிமையால் |
126. | உள்ள நிலைதளர்ந்த ஒண்ணுதலார், வெல்களிற்றை | | ‘மெள்ள நட’ என்று வேண்டுவார்; - ‘கள்ளலங்கல் |
127. | தாராமை யன்றியும், தையல்நல் லார்முகத்தைப் | | பாராமை சாலப் பயன்’ என்பார்; - ‘நேராக |
128. | என்னையே நோக்கினான்; ஏந்திழையீர்! இப்பொழுது | | நன்மை நமக்குண்(டு) எனநயப்பார்; - கைம்மையால் |
129. | ஒண்கலையும், நாணும், உடைத்துகிலும், தோற்றவர்கள் | | ‘வண்கமலத் தார்வலிந்து கோடும்’ எனப் - பண்பின் |
124. வென்றி வேல் செய், முருகன். வேனில் வேள் கோ, மன்மதன். (125) பலவாறாக ஐயுற்றவர்கள் இறுதியில் ‘ஆளுடைய பிள்ளையார்’ என்று துணிந்தனர். முன்பு ஐயுற்றதற்குக் காரணம் மிக்க அழகு. குல மதலை - சிறந்த குழந்தை. “குழவி மருங்கினும் கிழவ தாகும்”1 என்றார் ஆகலின், இங்குக் குழவியிடத்தும் மகளிரது காமம் புணர்க்கப்பட்டது. (125) “முன்னும் பின்னும் மொழியடுத்து வருதலும்”2 என்றபடி. ‘கை’ என்னும் இடைச்சொல் இங்கு. “சோர்ந்து” என்னும் சொல்லைப்பின் அடுத்து வந்தது. ‘வாழி’, அசை. பாழிமை - காதலின் மிகுதி. (126) கள் - தேன். அலங்கல் - மாலை. 127. “பாராமை சாலப் பயன்” என்பது எழுவாய்த் தொடரையும், ஆன் உருபின் மேல் தொக்க மூன்றாவதன் தொகையாயும் நின்று சிலேடையாயிற்று. “சாலப் பயன்” என்பதற்கு, ‘இவனது திருவருள் நிலைக்கு மிக்க பயனைத் தருவது’ எனவும், ‘இவன் ஆண்டில் மிகச் சிறியன்’ எனவும் இரு பொருள் கொள்க. இரண்டாவது பொருட்கு. பயன், ‘பயல்’ என்பதன் திரிபாகும். 128. ஒவ்வொருவரும் ‘என்னையே நோக்கினான்’ என நயப்பார் என்க. நயத்தல் - மகிழ்தல். கைம்மை - கைக்கிளைத் தன்மை. (129) “கலை” என்றது ‘மேலாடை’ எனவும் “உடை” என்றது, ‘இடையில் உடுக்கப்பட்ட உடை’ எனவும் கொள்க. ‘தோற்ற’ என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று. இங்ஙனம் இலக்கியங்களில் தெருவிடை உடையும், நாணும் ஒருங்கிழந்தாராகச்
1. தொல் - பொருள் -பாடாண் திணை. 2. தொல் - சொல் - இடையியல்.
|