140. | நைவார்; நலன்அழிவார்; நாணோடு பூண் இழப்பார்; | | மெய்வாடு வார்; வெகுள்வார்; வெய்துயிர்ப்பார்; தையலார் |
141. | பூந்துகிலைப், ‘பூமாலை’ என்றணிவார்; பூவினைமுன் | | ‘சாந்தம்’ என மெய்யில் தைவருவார்; - வாய்ந்த |
142. | ‘கிளி’ என்று பாவைக்குச் சொற்பயில்வார்; பந்தை | | ‘ஒளிமே கலை’ என்(று) உடுப்பார்; - அளிமேவு |
143. | பூங்குழலார் மையலாய்க் கைதொழுமுன் போதந்தான் | | ஒங்கொலிசேர் வீதி உலா. |
திருச்சிற்றம்பலம்
கண்ணி - 141, 142 மகளிரது மதிமயக்கம். சாந்தம் - சந்தனம். தைவருதல் - தடவுதல். பாவை - கிளிபோலச் செய்யப்பட்ட பதுமை. பயிற்றுவார் என்பதில் பிற வினை விகுதி தொகுத்தல், அளி - வண்டு. கண்ணி - 143 ‘இவ்வாறான பூங்குழலார்’ - என எடுத்துக் கொண்டு உரைக்க. கை தொழுமுன் - அருகிற் சென்று கும்பிடுவதற்கு முன்னே. உலாப் போதந்தான் - உலாப் போந்து முற்றினான். நெருவெண்பாட்டாக மிக நீண்டு வந்த இப்பாட்டில் முதற் றொட்டு, “நித்திலங்கள் ஈன” என்பது காறும் (8) வயல் களின் நடுவில் உள்ள குளங்களில் எருமை பாய்தலால் உளவான நிகழ்ச்சிகளே சொல்லப்பட்டன. “உலவிய” (8) என்பது முதல் “ஓங்கு” (10) என்பது காறும் வயல்களின் சிறப்பே கூறப்பட்டது. “மாசில் நீர்” (10) என்பது முதல், “வளம்துன்று வார்பொழிலின் மாடே” (22) என்பது காறும் மேற் கூறிய வயல்களை அடுத்துப் பல வகை மரக் கூட்டங்களையுடைய சோலையின் சிறப்புச் சொல்லப்பட்டது. “கிளர்ந்தெங்கும்” (22) என்பது முதல், “வேலை ஒலிப்ப” (24) என்பது காறும் புற நகரில் எழும் பல வகை ஒலிகள் கூறப்பட்டன. “வெறிகமழும் ... தன்மையவா” (24 - 26) என்னும் பகுதியில் புற நகர்ச் சிறப்புக் கூறப்பட்டது.
|