பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை938

“திண் நோக்கில்” (100) “கொண்டு வருதலும்” (109) என்பது காறும் உலாவிற்குச் கொள்ளப்பட்ட யானை ஏற்றத்தின் சிறப்புக் கூறப்பட்டது.

“எண்டிசை” (113) “பொக்கம் படைப்ப” (116) என்பது காறும் உலாவின் ஆரவாரச் சிறப்பே கூறப்பட்டது.

இதன்பின் உள்ள பகுதி முழுதும் வீதி உலாவில் ஞானசம்பந்தரைக் கண்ட, பேதை முதல் பேரிளம் பெண் ஈறான பருவ மகளிர் ஒருதலைக் காமமாகக் காதலித்து வருந்திய வருத்தமே கூறப்பட்டு முடிவெய்திற்று எனவே,

“பலவகைச் சிறப்புக்களை யுடைய சீகாழித் தலத்தில் அந்தணர்களது கவுணிய கோத்திரத்தில் ஒப்புயர்வற்ற ஒரு புதல்வராய் உலகம் உய்ய அவதரித்துத் திருவருளால் பதினாறாயிரம் தமிழ்ப் பதிகங்களைப் பாடிப் பாண்டி நாட்டில் சமணர்களை வாதில் வென்றது முதலிய அற்புதங் களை நிகழ்த்திய திருஞான சம்பந்தர் சீகாழி அந்தணர்கள் விண்ணப்பித்துக் கொண்டபடி பலவகை ஒப்பனைகளுடன் யானைமீது ஏறி, விழா ஆரவாரங்களுடன், தமது அருள் நிலையை அறியாது காதல் கொண்ட ஏழு பருவத்து மகளிரும் வருந்தியே நிற்கச் சீகாழி நகர் வீதிகளில் உலாப் போந்து மீண்டருளினார்” என்பதே இப்பாட்டின் பொருட் சுருக்க மாகக் கொள்க.

ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை முற்றிற்று