பக்கம் எண் :

939ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்

நம்பியாண்டார் நம்பிகள்
அருளிச் செய்த

38. ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்

ஒருபோகு கொச்சகக் கலிப்பா

நான்கடித்தாழிசை
திருச்சிற்றம்பலம்

1325.

அலையார்ந்த கடலுலகத்(து) அருந்திசைதோ(று) அங்கங்கே
நிலையார்ந்த பலபதிகம் நெறிமனிதர்க்(கு) இனி தியற்றி
ஈங்கருளி யெம்போல்வார்க்(கு) இடர்கெடுத்தல் காரணமா
ஓங்குபுகழ்ச் சண்பையெனு மொண்பதியு ளுதித்தனையே.தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்று கலம்பகம். “கலம் - பன்னிரண்டு; பகம் - ஆறு. ஆகப் பதினெட்டு உறுப்புக்களை உடையதாய் வருவது கலம்பகம்” - இப்பெயரின் காரணத்தைக் கூறுவர் ஆயினும், ‘பலவகைப் பொருள்களைக் கலந்து பலவகை யாப்புக்களால் ஆக்கப்படும் பிரபந்தம் கலம்பகம்” எனக் கொள்வதே பொருத்தமானதாகத் தெரிகின்றது. “கலப்பகம் - என்பது, - கலம்பகம் - என மெலிந்து வருவதாகக் கூறலாம்.

இதில் சில பொருள்கள் ஒன்றுக்கொன்று தொடர் பில்லாததாகவே வரும். இப்பிரபந்தமும் ஒருவரைப் பாட்டுடைத் தலைவராக வைத்தே பாடப்படும். பலபாட்டுக்கள் பாட்டுடைத் தலைவரைப் பற்றியே வருதலோடு, ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாத பலபொருள்கள் பற்றியும் பல பாட்டுக்கள் வரும். அவைகள் பிரபந்தப் பொருளாகும்.

பொருளால் தொடர்புபடாத இதன் பாட்டுக்கள் சொல்லால் தொடர்புபட்டு வரும்படி அந்தாதியாகப் பாடப்படும். அதனால் இப்பிரபந்தமும் சொற்றொடர் நிலைச் செய்யுளாம்.

‘நூறு, அறுபது, முப்பது’ என்னும் பாடல் தொகையால் இப்பிரபந்தம் அமையும். இக்கலம்பகத்துள் நாற்பத்தொன்பது பாட்டுக்களே காணப்படுகின்றன.

கலம்பகத்தின் இறுதிச் செய்யுளின் இறுதிச் சொல் முதற் செய்யுளின் முதற் சொல்லோடு இயைந்து மண்டலித்தல் வேண்டும். அம்முறைமையும் இதில் காணப்படவில்லை. அதனால், ‘இதன்