பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை940

செஞ்சடைவெண் மதியணிந்த சிவனெந்தை திருவருளால்
வஞ்சியன நுண்ணிடையாள் மலையரையன் மடப்பாவை
நற்கண்ணி யளவிறந்த ஞானத்தை யமிர் தாக்கிப்
பொற்கிண்ணத்(து) அருள்புரிந்த போனகமுன் நுகர்ந்தனையே


இறுதியில் சிலபாட்டுக்கள் கிடைக்கவில்லை’ - என்றே கருத வேண்டியுள்ளது.

“முதலில் ஒருபோகு கொச்சகம். அதனை யடுத்து ஒரு நேரிசை வெண்பா. அதனை யடுத்து ஒரு கட்டளைக் கலித்துறை. இவை கட்டாயமாக வரவேண்டும்” என்பது இப்பிரபந்த இலக்கணம். அதன்படி இதன் முதற்பாட்டு ஒருபோகு கொச்சகக் கலிப்பாவாக அமைந்துள்ளது.

1323. ‘பா நிலைக் கொச்சகம், மயங்கிசைக் கொச்சகம்’ எனக் கொச்சகக் கலி இருவகைப்படும். ‘கொச்சகம்’ என்பதே முறை பிறழ்ந்து வருவதுதான். வெண்பா முறை பிறழ்ந்து வருவது ‘பாநிலைக் கொச்சகம்’ எனவும், கலிப்பாவின் உறுப்புக்கள் முறை பிறழ்ந்து வருவது ‘மயங்கிசைக் கொச்சகம்’ எனவும் சொல்லப்படும். இவை கடவுளரைப் பொருளாகக் கொண்டு வரின் ‘ஒருபோகு கலி’ எனப்படும். கடவுளரைப் பொருளாகக் கொண்டு வரும் பாட்டுக்களை, ‘தேவ பாணி’ - என வழங்குதல் அக்கால வழக்கம். அத்தேவ பாணியில் ஒருவகை ஒருபோகு கலி. தேவ பாணியாய் வந்து ஒருபோகாய் நின்ற இக்கலிப்பா உறுப்புப் பிறழ்ந்து வந்தமையால் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாவாகும்.

இப்பாட்டில் அராக உறுப்பில் உள்ள, “தமிழிசை மறைவல்” என்பதையும், இறுதி யுறுப்பாகிய சுரிதகத்து முதற்கண் உள்ள “அருந்தமிழ் விரக” என்பதையும், மற்றும், “காழியர் நாத, “ஞானசம்பந்த” என்பவற்றையும் முதலிற் கொள்க, “தமிழிசை ... மறை” உம்மைத் தொகை. வலன் - வல்லவன்.

தாழிசை - 1 திசை - திசைகளில் உள்ள தலங்கள்; ஆகுபெயர். தேவாரங்கட்கு, “திருப்பதிகம்” என்பதே பெயர் ஆதலால் அவற்றால் உணர்த்தப்படும் நெறியை, “திருப்பதிக நெறி” - என்றார். இயற்றி - ஒழுங்காக விளக்கி. சண்பை - சீகாழி. ‘ஞானசம்பந்தர் நிலவுலகில் அவதாரம் செய்தற்குக் காரணமே பிறவித் துன்பத்திற்கு அஞ்சுபவரது துன்பத்தை நீக்கக் கருதித்தான்” என்பது இங்கு உணர்த்தப்பட்டது.

தாழிசை - 2 நற்கண்ணி - நல்ல வகையாகப் பார்க்கும் கண்களையுடையவள். நல்லவகை - அருளை வழங்குதல் மக்களுள் மகளிர் சிலரை அழகிய கண் உடைமை பற்றி, ‘நக்கண்ணையர்’ -