பக்கம் எண் :

941ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்

தோடணிகா தினனென்றுந் தொல்மரர்க் கெஞ்ஞான்றும்
தேடரிய பராபரனைச் செழுமறையின் அரும்பொருளை
அந்திச்செம் மேனியனை யடையாளம் பலசொல்லி
உந்தைக்குக் காண,வர னுவனாமென்(று) உரைத்தனையே

அராகம்

வளம்மலி தமிழிசை வடகலை மறைவல
முளரிநன் மலரணி தருதிரு முடியினை.

(1)

கடல்படுவிடமடை கறைமணி மிடறுடை
அடல்கரி யுரியனை யறிவுடை யளவினை.

(2)

பெயர்த்தும் தாழிசை

கரும்பினுமிக் கினியபுகழ்க் கண்ணுதல்விண் ணவன்அடிமேல்
பரம்பவிரும் புவியவர்க்குப் பத்திமையை விளைத்தனையே.

(1)

பன்மறையோர் செய்தொழிலும், பரமசிவா கமவிதியும்
நன்மறையின் விதிமுழுதும் ஒழிவின்றி நவின்றனையே.

(2)என்பர். ‘சுலோசனா’ - என்பது வடமொழி. அமிர்து - உணவு; சோறு போனகம் - உண்டி.

தாழிசை - 3 ‘உவன் அரன் ஆம்’ - என மாற்றிக் கொள்க. உவன் - நீர், “எச்சில் மயங்கிட உனக்கு ஈதுஇட்டாரைக் காட்டு”1 என வினாவிய அவன்.

அராகம் - 1 “மறை வல” என்னும் குறிப்புப் பெயரெச்சத்திற்கு, “முளரிநன் மலரணதரு திருமுடியினை” என்னும் தொடர்மொழி, ‘அந்தணன்’ என ஒரு சொல் நீர்மைத்தாய் முடிபாயிற்று.

அராகம் - 2; கறை - நஞ்சு. அறி - அறிதல். முதனிலைத் தொழிற் பெயர். ‘உடைய’ என்பதன் ஈற்று அகரம் தொகுத் தலாயிற்று. அளவு - பெருமை.

பெயர்த்தும் தாழிசை - 1; பரம்ப - பரவுதலால் பரவியது பலவிடத்தும் சென்று பாடியதால்.

தாழிசை - 2: பன்மறையோர், வைதிக அந்தணர்களும், சிவ மறையோர்களும். செய் தொழில் - செயற் பாலனவாகிய தொழில்கள். ‘ஒழுக்கம்’ என்றபடி. அகப் புற நூல்களாகிய


1. பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் - 73.