பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை942

நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்

அணிதவத் தவர்களுக்(கு) அதிகவித் தகனும்நீ; (1)
தணிமனத் தருளுடைத் தவநெறித் கமிர்தம்நீ; (2)
அமணரைக் கழுநுதிக் கணைவுறுத் தவனும்நீ: (3)
தமிழ்நலத் தொகையினில் தகுகவைப் பவனும்நீ; (4)

மூச்சீர் ஓரடி அம்போதரங்கம்

மறையவர்க் கொருவன் நீ: (1)
மருவலர்க் குருமு நீ; (2)
நிறைகுணத் தொருவன் நீ; (3)
நிகரில்உத் தமனும் நீ; (4)

இருசீர் ஓரடி அம்போதரங்கம்

அரியை நீ; (1)
அறவன் நீ; (3)
எளியை நீ; (2)
துறவன் நீ; (4)

தந்திரங்களைவிலக்குதற்கு, “பரம சிவ ஆகமம்” - என்றார். இஃதே பற்றிச் சேக்கிழார்,

வேத நெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க
. . . . . . . . . . . . . . .
புனிதவாய் மலர்ந்தழுத .....புகலித் திருஞான சம்பந்தர்
1

என்றார். ஒழிவின்றி - எஞ்சாமல்.

நாற்சீர் ஓரடி அம்போதரங்கம் - அணி தவம் - சிவ புண்ணியம். ‘அவர்களுக்கு அறிவிக்கும்’ என ஒரு சொல் வருவிக்க. வித்தகம் - சதுரப்பாடு; திறமை. அமிர்தம் - அமிர்தம் போல்பவன்; அழியாதபடி. காப்பாற்றினவன். நுதி - நுனி; முனை. ‘தக’ என்பது இறுதிநிலை தொக்கு, “தகு” என நின்றது.

முச்சீர் ஓரடி அம்போதரங்கம் - மருவலர் - பகைவர். சிவநெறிக்குப் பகைவரே பிள்ளையார்க்குப் பகைவர். உரும் - இடி. உகரம் சந்தி.

இருசீர் ஓரடி அம்போதரங்கம் - அருமை புறநெறி யாளர்க்கு. எளிமை சிவநெறியாளர்க்கு. அறவன் - அறத்தை அறிவுறுத்துபவன்.


1. பெரியபுராணம் - திருஞான சம்பந்தர் - 1