பெரியை நீ; (5) பிள்ளை நீ; (7) | உரியை நீ; (6) வள்ளல் நீ; (8) |
தனிச்சொல் எனவாங்(கு) சுரிதகம் | அருந்தமிழ் விரக! நிற் பரசுதும் திருந்திய நிரைச்செழு மாளிகை நிலைதொறும் நிலைதொறும் உரைச்சதுர் மறையின் ஓங்கிய ஒலிசேர் சீர்கெழு துழனித் திருமுகம் பொலிவுடைத் | 5. | தார்கெழு தண்டலை தண்பணை தழீஇ |
| கற்றொகு புரிசைக் காழியர் நாத! நற்றொகு சீர்த்தி ஞானசம் பந்த! நின்பெருங் கருணையை, நீதிநின் அன்புடை அடியவர்க்(கு) அருளுவோய் எனவே. | | 1 |
துறவன் - பற்று அற்றவன். தகுதியால் பெரியன். மற்றும் ஆசிரியனாக உரியன். திருமேனியால் பிள்ளை. உறுதிப் பொருள்களை வழங்குதலால் வள்ளல். தனிச்சொல்: எனக் கூறியவாறு சுரிதகம். விரகன் - வல்லவன். பரசுதும் - துதிப்போம். துழனி - ஆரவாரம். முகம் - முகப்பு; புறநகர். தண்டலை - சோலை. பணை - வயற் கூட்டம். ‘துழனியையும், திருமுகத்துத் தண்டலையையும், பணையையும் தழீஇக்கற்கள் தொக்கு நிற்கப் பெறும் புரிசையை யுடைய காழி’ - என்க. தார் - மலர்களின் ஒழுங்கு. புரிசை - மதில். ‘நீதியாக’ என ஆக்கம் வருவிக்க. இஃது ஆசிரியச் சுரிதகம். “தமிழ் விரக! காழியர் நாத! ஞானம்பந்த!- (நீ) நின் கருணையை நின் அடியார்க்கு நீதியாக அருளுவோம் - எனக் கருதி நின்னை (யாம்) “உதித்தனை; நுகர்ந்தனை; உரைத்தனை; திருமுடியினை; அளவினை; விளைத்தனை; நவின்றனை; பல பெருமைகளை யுடையவன் நீ” எனக் கூறியவாற்றால் பரவுதும் - என வினை முடிவு செய்து, ‘எமக்கும் நின் கருணையை வழங்கியருள்’ - எனக் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. ஏகாரங்கள் தேற்றப் பொருளவாய்ச் சிறப்புணர்த்தி நின்றன. கலிப் பாவில் முதற்கண் வரற்பாலதாய தரவு இதன் கண் வரவில்லை. முதற்கண் தாழிசை வந்ததாயினும், அராகத்தின் பின் மீட்டும் தாழிசை வந்தது. அம்போதரங்கத்துள் பேரெண்ணாகிய நாற்சீர் ஈரடி
|