பக்கம் எண் :

945ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்

எண்சீர்க் கழிநெடிற் சந்த விருத்தம்

1328.போற்று வார்இடர் பாற்றிய புனிதன்,

பொழில்சு லாவிய புகலியர் பெருமான்,

ஏற்ற வார் புகழ் ஞானசம் பந்தன்

எம்பி ரான் இருஞ் சுருதியங் கிரிவாய்ச்

சேற்று வார்புனம் காவல் புரிந்தென்

சிந்தை கொள்வ(து) உம் செய்தொழி லானால்,

மாற்றம் நீர்எமக்(கு) இன்(று) உரை செய்தால்

வாசி யோ! குற மாதுநல்லீரே.

4



தமிழால் பாடிய ஆசிரியனை யானும் தமிழால் பாடி உவப்பிக்க நினைக்குங்கால், எனது புன்கவி களையும் யான் அவனது நன்கவிகள் போலக் கருதிக் கொள்ளும் ஓர் பேதமையை உடையேன் ஆயினேன்” - என்பதாம். இதனால், இக்கட்டளைக் கலித்துறை ஓராற்றால் இப்பிரபந்தத்தின் தொடக்கமாக அமைகின்றது.

1328. குறிப்புரை: இப்பாட்டு, அகப் பொருட் களவியலில், தலைவி, தோழி இருவரும் ஒருங்கு இருக்கும் அமையம் நோக்கி, அவர்கள்முன் தலைவன் சென்று அவர்களுடைய ஊரை வினாதல், பேரை வினாதல் முதலியவற்றைச் செய்யும் துறையாகச் செய்யப்பட்டது.

‘ஒருநாள், இருநாள் மூன்று நாள்’ என இதுகாறும் பிறர் ஒருவரும் அறியாதே களவொழுக்கத்தில் ஒழுகிய தலைவன் பின்னும் அதனை நீட்டிக்கக் கருதினால், ‘இனி இது துணையின்றி முடியாது’ என்னும் கருத்தினால் பாங்கன் துணையையும் பாங்கியின் துணையையும் பெறுவான். அத்துணைகளால் நிகழும் கூட்டம் முறையே ‘பாங்கற் கூட்டம்’ என்றும், ‘பாங்கியிற் கூட்டம்’ என்றும் சொல்லப்படும். அவற்றுள் இது பாங்கியிற் கூட்டத்து, ‘இருவரும் உள்வழி அவன் வர உணர்தல்’ - என்னும் பகுதியாம்.

பாற்றிய - போக்கிய. இடர் போக்கியதைக் கொங்கு நாட்டில் தீப்பிணி வாராமல் தடுத்தது, தந்தை யார்க்கு வேள்வி செய்யப் பொன் அளித்தது முதலியவற்றால் அறிக. வார் புகழ் - நீண்ட புகழ். ‘ஆர் புகழ்’ எனலும் ஆம். “எம்பிரான் சம்பந்தன்” - என்பது சுந்தரர்திருமொழி1. ‘எம்பிரானது சுருதி’ எனவும், ‘அச்சுருதியை உடைய கிரி’ (மலை) எனவும் கொள்க. வாய், ஏழன் உருபு. சேறு - இனிமை; தினையின் இனிமை.காவல் புரிதலை இங்குக் கிளிகடியும் பாடலால்


1.திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகம்.