பக்கம் எண் :

947ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்

பன்னிருசீர்க் கழிநெடிற் சந்த விருத்தம்

1330.வகைதகு முத்தமிழ் ஆகரன், மறைபயில் திப்பிய வாசகன்

வலகலை வித்தகன், வானவில் மதிஅணை பொற்குவை மாளிகை

திகைதிகை மட்டலர் வார்பொழில் திகழ் புக லிக்கர சாகிய

திருவளர் விப்ர சிகாமணி, செழுமல யத்தமிழ்க் கேசரி

மிகமத வெற்றிகொள் வாரணம், மிடைவரு டைக்குலம் யாளிகள்

விரவிரு ளில்தனி நீள்நெறி வினைதுயர் மொய்த்துள வே; மணி

நகைஎழி லிற்குற மா(து) உன(து) அருமை நினைக்கிலள்; நீ இவண்

நசையின் முழுப்பதி ஆதல்முன் நணுகல்; இனிக்கிரி வாணனே.

6



1330. குறிப்புரை: அகப் பொருள் களவியலில், தலைவனை வரைவுகடாவும் தோழி அதனை நேர் முறையிற் கூறாது, இரவு வருவானை, பகல் வருக எனவும், பகல் வருவானை, ‘இரவு வருக’ எனவும், ‘ஒரு பொழுதிலும் இங்கு வாரற்க’ எனவும் கூறுதற்காக இஃது, ஆறின்னாமை கூறி இரவுக் குறி விலக்கலாகச் செய்யப்பட்டது.

“கிரி வாணனே” என்பதை, “கேசரி” என்பதன் பின்னர்க் கூட்டுக. கிரி வாணன் - மலை வாழ்நன்; குறிஞ்சி - நிலத் தலைவன். ஆகரன் - இருப்பிடம் ஆனவன். திப்பிய வாசகன் - தெய்வத் தன்மை வாய்ந்த மொழியை உடையவன். அஃதாவது, நிறைமொழி ஐயன். “வலகலை வித்தகன்” என்பதை, ‘கலை வல வித்தகன்’ என மாற்றிக் கொள்க. ‘வான வில்லும், மதியும் அணைகின்ற மாளிகை, பொற்குவைகளை யுடைய மாளிகை’ - என்க. திகை - திசை. அடுக்குப் பன்மை பற்றி வந்தது. மட்டு அலர் - தேனை உடைய மலர்களை உடைய (பொழில்) திரு - திருவருள். விப்ர சிகாமணி - அந்தணர்களுக்குத் தலைமணி போன்றவன். மலயத் தமிழ் - பொதிய மலையில் தோன்றிய தமிழ். தமிழ்க் கேசரி - தமிழைப் பாட வல்ல சிங்கம். அரனை, “அரசு” என்றதும், கேசரி போல்வானை, “கேசரி” என்றதும் பான்மை வழக்குக்கள் ‘வாரணமும், வருடைக் குலமும், யாளிகளும் விரவுகின்ற நீள்நெறி வாரணம் - யானை. வருடைக் குலம். மலையாடுகளின் கூட்டம். வருடை, இங்குச் சரபம் ஆகாது, அவ் இனம் கூட்டம் ஆதல் இன்மையால். வினை துயர் - உம்மைத் தொகை. வினை - கொலைவினை. ‘விளைதுயர்’ என பாடம் கொள்ளுதாம் “நெறி - வழி “நெறி துயர மொய்த்துள” என, இடத்து