வேறு 1331. | வாணில வும், புனலும் பயில் செஞ்சடை வண்கரு ணாகரனை | | மலைமா துமையொடு மிவனா வானென முன்னாளுரை செய்தோன் | | சேணில வும்புகழ் மாளிகை நீடிய தென்புக லிக்கரசைத் | | திருவா ளனையெழி லருகா சனிதனை மருவா தவர்கிளைபோல் | | நாணில வும்பழி யோகரு தா(து)அய லானொரு காளையுடன் | | நசைதீர் நிலைகொலை புரிவே டுவர்பயில் தருகா னதர்வெயிலிற் | | கேணில வுங்கிளி பாவையொ டாயமும் யாயெனை யும்மொழியக் | | கிறியா லெனதொரு மகள்போ யுறுதுயர் கெடுவேனறிகிலேனே |
நிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது ஏகாரம், தேற்றம் மணி - முத்து மணி. எழிலின் - அழகினையுடைய. “குறமாது” என்றது தலைவியை. “உனது அருமை” என்பதற்கு, ‘உனது கூட்டத்தினது அருமை’ என உரைக்க, ‘அதனை நினைக்கிலன்’ எனவே, ‘வருதற்கண் உள்ள அருமையையே, அஃதாவது இடர்ப் பாட்டினையே நினைக்கின்றாள்’ என்பதாம். நசை - விருப்பம். நடையின் இனி நணுகல் - விருப்பம் காரணமாக வருதலை இனித் தவிர்வாயாக (சிறிது பழி - அம்பல்) முழுப் பழி - அவர் முழுப் பழி ஆதல் முன் - (அம்பல்) அலர் ஆதற்கு முன்பே. இவ்வாறு தோழி கூறியதற்குப் பயன், தலைவன் களவொழுக்கத்தை ஒழிந்து வரைவான் ஆதல். 1331.குறிப்புரை: இப்பாட்டு அகப் பொருள் உடன் போக்கில் செவிலி புலம்பல் துறையாகச் செய்யப்பட்டது. வாள் நிலவு - ஒளியை உடைய திங்கள் (பிறை). கருணா ஆகரன் - அருளுக்கு இருப்பிடமானவன். ‘உமையொடும் கூடிய இவன்’ என ஒரு சொல் வருவிக்க. “ஆவான்” என்பதற்கு, ‘நீவிர் வினாவியன் ஆவான்’ என உரைக்க. உரை செய்தது தந்தை யார்க்கு. திருவாளன் - திருவருள் கைவரப் பெற்றவன். அருக அசனி - சமணர்க்கு இடியை ஒத்தவன். கிளை - சுற்றம். ‘நாளும் நிலவும் பதி’ என முற்றும்மை விரிக்க. ஓகாரம், சிறப்பு, நசை - விருப்பம், இரக்கம். “நசை தீர் வேடுவர், கொலை புரி வேடுவர்’ எனத் தனித் தனி இயைக்க, “பயில் தரு” என்பதில் தரு, துணைவினை. கான் அதல் - காட்டு வழி; பாலை நில வழி. கேள் - கேளாக; நட்பாக. பாவை - பதுமை. ஒடு, எண்
|