எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 1332. | அறிவாகி யின்பஞ்செய் தமிழ்வாதில் வென்றந்த | | அமணான வன்குண்டர் கழுவேற முன்கண்ட | | செறிமாட வண்சண்பை நகராளி யென்தந்தை | | திருஞான சம்பந்த னணிநீடு திண்குன்றில், | | நெறியால மண்துன்றி முனைநாள்சி னங்கொண்டு | | நிறைவார் புனந்தின்று மகள்மேல் வருந்துங்க, | | வெறியார் மதந்தங்கு கதவா ரணங்கொன்ற, | | வெகுளாத நஞ்சிந்தை விறலா னுளன்பண்டே. | | 8 |
ஒடு. ‘இது கிளி, ஆயம், யாய்’ என்பவற்றோடும் இயைந்தது. ஆயம் - தோழியர் கூட்டம். யாய் - நற்றாய். ‘கிளி முதலாக யாய் ஈறாக உள்ளவர்களையும், எனையும் ஒழிய’ என்க. ‘பெற்ற தாயினும் வளர்த்ததாய் மறக்கற்பாலளல்லள்’ என்பாள், “எனையும்” என வேறு பிரித்துக் கூறினாள். ‘ஒழியப் பண்ணி’ என ஒரு சொல் வருவிக்க. கிறி - வஞ்சனை; தலைவனை உட்கொண்டு, “கிறியால் எனது ஒரு மகள் போய்” என்றாள், போய் - போயதனால். “எனது மகள்” என, உயர்திணை முறைக் கிழமைக்கண் நான்காம் உருபு வாராது, ஆறாம் உருபு வந்தது கால வழக்கு. கெடுவேன், இரக்க குறிப்பு இடைச்சொல். ‘இதனை அறிகிலேன்’ என வேறு வைத்து உரைக்க. ‘முன்பு அவள் செய்த குறிகளை உற்று அறியேன் ஆயினேன்’ என்பதாம். 1332. குறிப்புரை: இப்பாட்டு, அகப் பொருட் களவியலில், தலைவி தலைவனை எய்தப் பெறாமை எவ்வாற்றாலோ நிகழ்ந்தமையின் வேறுபட, செவிலி, ‘இவள் வேறுபடக் காரணம் என்னை’ என வினாவியவழி அவட்குத் தோழி களிறு தரு புணர்ச்சியால் அறத்தொடு நின்ற துறையாகச் செய்யப் பட்டது. அறிவாகி - ஞானமாகி. இன்பம் செய் - வீட்டின்பத்தைத் தருகின்ற தமிழ். ஞானசம்பந்தரது தமிழ்ப்பாடல்கள் ‘தமிழால்’ என மூன்றாவது விரிக்க. அமண் - சமண்; இது குழூஉப் பெயர். ‘திருஞான சம்பந்தனது குன்று’ என்க. நெறி ஆல - வழியில் உள்ளார் ஓலம் இட. மண் - தூசு. ‘துன்றுவித்து’ என்பது பிறவினை விகுதி. தொகுக்கப்பட்டு, “துன்றி” என வந்தது. துன்றுவித்தல் - அடரச் செய்தல். புனம் தின்று - காட்டை அழித்துக் கொண்டு ‘நின் மகள்மேல்’ என்க. துங்க வாரணம் - உயரமான யானை. வெளி - நாற்றம் “கத வாரணம்” என்பதில் கதம், இன அடை. “வெகுளாத” என்பது, ‘விரும்புகின்ற’ என அதன் மறுதலைப் பொருளைக் குறித்தது. ‘விரும்புகின்ற நம் சிந்தை’ என்பதை, நம் சிந்தை விரும்புகின்ற’ என மாற்றிக் கொள்க. விறலான் - யானையை வென்ற வெற்றியை உடையவன். “நம் சிந்தை விரும்புகின்ற” என்பதனால், “இனி அவனே நின் மகட்குத்
|