176. | உத்தம ராயடி யாருல காளத் தமக்குரிய, மத்தம் அராமதி மாடம் பதிநலஞ் சீர்மைகுன்றா; எத்தம ராயும் பணிகொள வல்ல இறைவர்வந்தென் சித்தம ராயக லாதுடன் ஆடித் திரிதவரே. | | 8 |
குறிப்புரை: இஃது இறையது பொது வியல்பைக் கூறியது. "கூத்து" எனப் பொதுப்படக் கூறினாராயினும், "ஆடித் திரிவது" என எடுத்தோதினமையால், அது முறைப்படி (கூத்த நூல் முறைப்படி.) அமைந்த கூத்தாயிற்று. இது பெத்தான்மாக் களுக்கு ஊன நடனமாயும், முத்தான்மாக்களுக்கு ஞான நடன மாயும் நிகழ்தலை உண்மை விளக்க நூலால் அறிக1 "கோல் வளை" என்பது 'திரட்சியான வளையலை அணிந்தவள் என ஒருமையாய் நின்று, பின் 'கள்' விகுதியேற்றுப் பன்மையாயிற்று. சிவபெருமானுக்குத் தேவியர் 'உமை, கங்கை' என இருவராதல் வெளிப்படை எனவே, 'அவர்களைக் காப்பாற்றுதற்கு வழியில்லாமையால் பிச்சை எடுக்கின்றான்' என்பது வெளிப் படைப் பொருளாய் இகழ்ச்சியைத் தோற்று வித்தது. ஆயினும், 'பிச்சையிட வரும் மகளிரது வளைகளைக் கவர்ந்துகொள் கின்றான்' என்பது உள்ளுறைப் பொருளாய்ப் புகழ்ச்சியைத் தோற்றுவித்தது. இது சிலேடையணி. தொழிற் பெயர்கள் வினையொடு முடியுங்கால் வினையெச்சத்தோடே முடிதலும் உண்டு. ஆகையால், "திரிவது" என்னும் தொழிற்பெயர் "பாத்து" என்னும் வினையெச்சத்தோடே முடிந்தது. பாத்து - பகுத்து. இது வெளிப்படைப் பொருளில் 'பகுக்க' எனச் செயவெனெச்சப் பொருட்டாயும், உள்ளுறைப் பொருளில் 'கவர்ந்து' என்னும் பொருட்டாயும் நின்றது. ஏத்து - துதி முதனிலைத் தொழிற்பெயர். ஆதரித்தல் - விரும்புதல் "இமையவர் ஒத்து" என்றதனால் இறைவன் திருவருட் குறிப்பினை உணரத் தேவர்களும் வேதத்தை உணர்தல் சொல்லப்பட்டது. 'பெத்தான்மாக்கள், முத்தான்மாக்கள் ஆகிய இருவகை ஆன்மாக்களுக்கும் ஏற்புடையவற்றைச் செய்து அவைகளை உய்வித்தலும், தன்னை உணராதவரையும் தக்க வழியால் உணர்வித்தலும், சிறிது உணர்ந்தாரையும் தம்மைப் புகழ்தல் வாயிலாக மிக உணர்ந்து அன்பு கூரச் செய்தலும், உயிர்களுக்கு நூல்கள் வாயிலாக நன்னெறியை உணர்த்துதலும் இறையது பொது வியல்புகள்' என்பது கூறியவாறு. 'மேனி பவளம்' என்றது வசிகரித்தலைக் கூறியது. "கொல், ஆம்" என வந்தன எல்லாம் அசைநிலைகள். 176. பொழிப்புரை: தம் அடியார்கள் யாவரினும் மேலானவராய், மண்ணுலகு வானுலகுகளை ஆள, ஊமத்தை மலர், பாம்பு,
1. வெண்பா - 35, 36
|