177. | திரிதவர் கண்ணுள்ளும் உள்ளத்தின் உள்ளுந் திரிதரினும் அரிதவர் தன்மை அறிவிப்ப(து) ஆயினும் ஆழிநஞ்சேய் கரிதவர் கண்டம் வெளிதவர் சாந்தம்கண் மூன்றொடொன்றாம் பரிதவர் தாமே அருள்செய்து கொள்வர்தம் பல்பணியே. | | 9 |
178. | பணிபதம்; பாடிசை; ஆ(டு)இசை யாகப் பனிமலரால் அணி;பதங் கன்பற் கொள்அப்பனை; அத்தவற் கேயடிமை |
திங்கள், அவற்றின் அருகே நீர் இவைகளே தமக்கு உரியவாய் மிக அழகும் புகழும் குறையாதனவாய் உள்ளன. எக்குலத்தவராயினும் தமக்கு அடியவர்களாக ஆகும்படி செய்து கொள்ள வல்ல இறைவர் தமது மேல் நிலையினின்றும் இறங்கி வந்து என் உள்ளத்தில் பொருந்தி என்னோடு உடன் இயங்கியே திரியும் தன்மையுடையராகின்றனர். குறிப்புரை: 'இதுவும் மேற்கூறிய ஊமத்தை முதலியவற்றை உவந்து கொண்டது போல்வதுதான்' என்பது குறிப்பெச்சம். இக்கருத்துக் குறிப்பால் தோன்றவே இதனை இருதொடராக அருளிச் செய்தார். 'தமக்கு உரியவாய்' என ஆக்கம் விரித்து "சீர்மை குன்றா" என்பதற்கு முன்னே கூட்டுக. மத்தம் - ஊமத்தை, மாடு - பக்கம். 'அம்பு + அதிநலம்' எனப்பிரிக்க. அம்பு - நீர், நலம் - அழகு. 'அதிநலமும், சீர்மையும் குன்றா' என்க. ஈற்றடியில், 'மருவாய்' என்பது, 'மராய்' என வந்தது. மருவு - மருவுதல்; முதனிலைத் தொழிற்பெயர். திரி தவர் - திரிதலையே தவமாக - தொழிலாக - உடையவர். 177. பொழிப்புரை: இறைவர் மேற்கூறியவாறு என் கண்ணி னுள்ளும், கருத்தினுள்ளும் என்னோடு அகலாது நின்று உடனே திரிபவராயினும், 'அவரது தன்மை இதுதான்' என்று என்னால் வரையறுத்துச் சொல்லுதல் இயலாது. ஆயினும் கடல் நஞ்சம் பொருந்திய அவரது மிடறு கறுத்தது; அவர் பூசிய சந்தனம் வெளுத்தது; (திருவெண்ணீறு) கண்களோ மூன்று, ஏந்திய வில் பிறரால் ஏந்துதற்கு அரிய ஒன்று (அஃதாவது மலை) தமக்குத்தாமே பல பணிகளைப் பணித்துக் கொள்வார். (பிறரால் யாதும் பணிக்கப்படுவாரல்லர்). என இங்ஙன் ஒருவாறு அவரைப் பற்றிக் கூறலாம். குறிப்புரை: ஈற்றில் வருவித்து உரைத்தது குறிப்பெச்சம். 'கண் முன்னொரு பரி தவர் ஒன்றாம்' என்க - பரித்தல் - தாங்குதல். தவர் - வில். 178. பொழிப்புரை: எனது ஒப்பற்ற மனமே, சூரியனது பல்லை வகுத்த, யாவர்க்கும் தந்தையாகிய சிவனை அடி பணி; கூத்தாடு;
|