| துணிபதங் காமுறு தோலொடு நீறுடல் தூர்த்துநல்ல தணிபதங் காட்டிடுஞ் சஞ்சலம் நீ;யென் தனிநெஞ்சமே. | | 10 |
179. | நெஞ்சந் தளிர்விடக் கண்ணீர் அரும்ப முகம்மலர அஞ்செங் கரதலங் கூம்பஅட் டாங்கம் அடிபணிந்து தஞ்சொல் மலரால் அணியவல் லோர்கட்குத் தாழ்சடையான் வஞ்சங் கடிந்து திருத்திவைத் தான்பெரு வானகமே. | | 11 |
பொருந்தும் வகையால் பல இசைகளைப் பாடு; குளிர்ந்த மலர்களால் அலங்கரி; 'அப்பெருமானுக்கே யான் அடிமை' என்னும் நிலைமையை நிச்சயமாக உணர்வதையே விரும்பு. இச்செயல்களில் உனக்கு அவனைப் போலவே உடம்பில் தோலை உடுத்தலோடு, நீற்றை நிறையப் பூசி அமைதி யுற்றிருத்தலாகிய நல்ல பதவியைக் கொடுக்கும். இனி உனது கவலையை விடு. குறிப்புரை: தம் மொழிவழி நிற்றல் வேண்டி, 'ஒப்பற்ற நெஞ்சமே' என்றார். இனி, 'துணையில்லாது தனித்து நிற்கும் நெஞ்சமே' என்றலும் ஆம். 'பதம் பணி' என மாற்றி யுரைக்க இசையாக - இசைவாக; பொருந்தும்படி. 'இசையாக இடை பாடு' என்க. பதங்கன் - சூரியன். 'அடிமைப் பதம் துணி' என இயைக்க. பதம் - நிலைமை. "தோலொடு...... தணிபதம்" என்றது சாரூப பதவியை நீ - நீத்துவிடு. 179. பொழிப்புரை: மனம், வறட்சியால் வாடிய செடி யாகாது, அன்பென்னும் நீரால் குளிர்ந்த செடியாகித் தளிர்க்க, அதினின்றும் தோன்றுகின்ற கருத்து அரும்புவதன் அறிகுறி யாக அழகிய, சிவந்த கைகள் குவிந்து தோன்ற அக்கருத்தில் அன்பாகிய தேன் ததும்புவதாகக் கண்களில் நீர் ததும்ப, அரும்பிய கருத்து மலர்வதாக முகம் மலர, மலர்ந்த கருத்துக் களை வெளிப்படத் தெரிவிக்கின்ற, தமது சொற்களாகிய மலர் களைத் தொடுத்த பாக்களாகிய மாலைகளை அணிவித்து, எட்டுறுப்புக்களாலும் அடி பணிய வல்லவர்க்கு என்றே நீண்ட சடையை யுடையவனாகிய சிவபெருமான் சிறிதும் கர வில்லாமல் தனது பெரிய சிவலோகத்தை நன்றாகப் படைத்து வைத்தான். குறிப்புரை: "தளிர்விட" என்பது முதலியன உருவகத் தைக் குறிப்பால் உணர்த்தி நின்றன. "கண்ணீர்" என்பது சிலேடையாய் 'கள் + நீர்' எனப் பிரித்து, 'தேன்' எனப் பொருள் கொள்ள நின்றது. எட்டுறுப்பாவன; முழங்கால் இரண்டு, மார்பு ஒன்று, தோள் இரண்டு, செவி இரண்டு, முகம் ஒன்று. இவை எட்டுறுப்பும் நிலத்தில் தோயப் பணிதல் அட்டாங்க நமற்காரம்' எனப்படும். மார்பும், தோள்களும் ஒழிந்த ஐந்துறுப்புக்கள் நிலத்தில் தோயப் பணிதல்
|