பக்கம் எண் :

99பொன்வண்ணத் தந்தாதி

180.வானகம் ஆண்டு,மந் தாகினி ஆடி,நந் தாவனஞ்சூழ்
தேனக மாமலர் சூடிச்செல் வோருஞ் சிதவல்சுற்றிக்
கானகந் தேயத் திரிந்திரப் போருங் கனகவண்ணப்
பால்நிற நீற்றற்(கு) அடியரும் அல்லாப் படிறருமே.

12



பஞ்சாங்க நமற்காரமாகும். 'மகளிர் அட்டாங்க நமற்காரம் செய்தல் கூடாது' என விலக்கியுள்ளது. தலைமட்டும் தாழக் கும்பிட்டு வணங்குவது ஏகாங்க நமற்காரம். 'இறைஞ்சுதல்' என்பதும் இதுவே. அட்டாங்கத்தோடு கூடியது, 'சாட்டாங்கம்' எனப்படும். ஈற்றில் வைக்கற்பாலதாய இதனைச் செய்யுள் நோக்கி இடை வைத்தார். 'சிவபெருமானை அன்பொடு பணிந்து பணி செய்பவர்கள் தவறாமல் சிவலோகத்தை அடைவர்' என்பது உணர்த்தியவாறு. "தம் சொல் மலரால்" என்றமையால் தாமே பாக்களை இயற்றிப் போற்றுவார் குறிக்கப்பட்டனர். தம் சொல்லால் தொடுக்கப்படும் பாக்களுக்கு ஒரு தனிச் சிறப்புச் சொல்லப்படுகின்றது. இதனால், 'பாமாலைகளைப் புதிது புதிதாய்த் தொடுத்தணியும் மரபு இடையே அற்றொழியாமல், நீடு செல்லல் வேண்டும்' என்பது இறைவனது திருவுளக் குறிப்பாதல் விளங்கும். தேவார திருவாசகங்கட்குப் பின்னரும் அன்புடைத் தொண்டர்கள் பாமாலை சாத்திப் பரவினமை இதற்குத் தக்க சான்று.

'பத்தனாய்ப் பணிந்தடியேன் றன்னைப் பன்னாள்

பாமாலை பாடப் பயில்வித் தானை'1

'பந்தமறுத் தாளாக்கிப் பணிகொண் டாங்கே

பன்னியநூல் தமிழ்மாலை பாடு வித்துஎன்

சிந்தைமயக் கறுத்ததிரு அருளினானை.'2

'நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை.'3

'நமக்கும் அன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க

அற்சனை பாட்டேயாகும்; ஆதலால் மண்மேல் நம்மைச்

சொற்றமிழ் பாடுகென்றார், தூமறை பாடும் வாயார்.'4

என்பன முதலிய திருவாக்குகள் இதனை வலியுறுத்தும்.

180. பொழிப்புரை: சிவகங்கையில் ஆடுதல், சிவ நந்தன வனத்தில் நிறைந்த பூக்களைச் சூடுதல் முதலிய சிறப்புக் களுடன் சிவலோகத்தில் வாழ்பவரும், கிழிந்த ஆடையை அரையில் சுற்றிக்கொண்டு, கால் நகம் தேய மண்ணுலகில்" எங்கும் திரிந்து


1. திருமுறை - 6.68.3

2. மேற்படி - 84. 4

3. திருவாசகம் - திருக்கோத்தும்பி - 12

4. பெரிய புராணம் - தடுத்தாட் கொண்டது - 70.