பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை968

வேறு

1359.

பெறுபயன் மிகப்புவியு ளருளுவன பிற்றைமுறை

பெருநெறி யளிப்பனபல பிறவியை யொழிச்சுவன

உறுதுய ரழிப்பனமு னுமைதிரு வருட்பெருக

உடையன நதிப்புனலி னெதிர்பஃறி யுய்த்தனபுன்

நறுமுறு குரைச்சமணை நிரைகழு நிறுத்தியன

நனிகத வடைத்தனது னருவிட மகற்றியன

துறுபொழில் மதிற்புறவ முதுபதிம னொப்பரிய

தொழில்பல மிகுத்ததமிழ் விரகன கவித்தொகையே.



அணைவான் - அருகாக உள்ள. கனை கடல் - ஒலிக்கின்ற கடல். “அவை” பகுதிப் பொருள் விகுதி. படியாரும் நிகர் அரிய - இப்பூமியில் ஒருவரும் தன்னை நிகர்ப்பவர் இல்லாத, “வரி ஆரும் மதர் நயனி” என்னும் தொகைச் சொல் ஒரு சொல் நீர்மைத்தாய், ‘தலைவி’ எனப் பொருள் தந்து, “அரிய” என்னும் குறிப்புப் பெயர் எச்சத்திற்கு முடிபாயிற்று. வரி ஆரும் (நயனம்) - செவ்வரி படர்ந்த (கண்கள்). மதர் நயனம் - களிப்புத் தங்கிய பார்வையை உடைய கண்கள். நயனி - கண்களை உடையவள். ‘நயனிக்கு’ எனப் பொருட்டுப் பொருளதாகிய நான்கண் உருபு விரிக்க. ‘நுளையர் பெண்ணாயினும் உனது அருளையான் வேண்டுகின்றேன்’ என்பான், “நுளையர் மடமாது உன் அருள் பெறின் யான் எப் பணியையும் புரிவேன்” என்றான். இப்பாட்டு நெய்தல் திணையாதல் வெளிப்படை

1359.குறிப்புரை: “துறுபொழில் மதிற் புறவ முதுபதி மன்” என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.

இப்பாட்டுத் திருஞானசம்பந்தரது திருப்பதிகங்கள் செய்த அற்புதங்களைத் தொகுத்துக் கூறுகின்றது. புவியுள் பெறு பயன்களை (பெற வேண்டிய பயன்களை) மிக அருளுவன. பிற்றை முறை - அவற்றிற்குப் பின், ‘ஒழித்து’ என்பது “ஒழிச்சு” என மருவி வந்தன. ‘ஒழிச்சுவிடுவன’ என்பதில் ‘விடு’ என்னும் துணிவுப் பொருள் விகுதி தொகுக்கப் பட்டது. பஃறி - ஓடம். உய்த்தன - செலுத்தின. ‘புன் சமண்’ என இயையும். “நறு மறு” என்பது வெகுளியை முழுதும் காட்டாது சிறிது புலப்படுத்து ஒலிக்குறிப்பு. குரை - குரைத்தல்; பேசுதலை, “குரைத்தல்” என்றது இகழ்ச்சி பற்றி. சமண் - சமணக் குழாம். துன் அரு விடம் - பொருந்துதற்கு அரிய நஞ்சு. துறு - நெருங்கிய. புறவம் - சீகாழித் தலம். ‘தொழில் பலமிகுத்த தமிழ்’ என இயைக்க.