பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை972

வஞ்சித் துறை

1362.

நீதியின் நிறைபுகழ் - மேதகு புகலிமன்

மாதமிழ் விரகனை - ஓதுவ(து) உறுதியே

38

எண்சீர்க் கழிநெடிற் சந்த விருத்தம்

1363.

 உறுதிமுலை தாழ எனையிகழும் நீதி

உனதுமனம் ஆர முழுவதும்அ தாக

அறுதிபெறும் மாதர் பெயர்தருதல் தானும்

அழகி(து);இனி, யான்உன் அருள்புனைவ தாகப்

பெறுதிஇவை; நீஎன் அடிபணிதல், மேவு

பெருமைகெட நீடு படி(று);ஒழி; பொன் மாடம்

நறைகமழும் வாச வளர்பொழில் சுலாவும்

நனிபுகலி நாத! தமிழ்விரக! நீயே

39



கபாடம் - பருத்த, வலிமையை உடைய கணைய மரத்தோடு கூடிய கதவு. கணைய மரமாவது, கதவைச் சார்த்திய பின்பும் அது திறக்கப்படாதபடி குறுக்காகப் போடப்படும் மரம். விலைய வாயில் விலை மதிப்புடைய வாயில். அஃதாவது பொன்னாலும், மணிகளாலும். இயன்ற வாயில், மஞ்சு - மேகம். இஞ்சி - மதில். கனகச் சிலம்பு - பொன் மலை. ஒளி - யானை கட்டும் கூடம். சூளிகை - மேல் மாடத்தின் நெற்றி. பட மணி - நாக ரத்தினம். துடைத்து - மாசு போகக் கழுவி. இந்திர வில் - வானவில். அஃது இங்கு அதனோடு ஒத்த ஒளியுருவைக் குறித்தது. செம்மலர் மாது - திருமகள். இறை - சிறிதும். உம்மை, தொகுத்தல் “வண்டு அறை சோலை... கழுமலம்” - என்க. “கேள் மதி” என்பவற்றில் மதி, முன்னிலையசை. முன் பாட்டு இறுதியில் “அணுகார்” என்றதனை, ‘கார்’ என்றே கொண்டு அதன் திரிபாக ‘கரு’ என்பது இப்பாட்டின் முதலாயிற்று.

1362.குறிப்புரை: நீதி - நடுவு நிலைமை. ‘நீதி நிலை பெறுதலால் நிறைந்த புகழை உடைய புகலி’ - என்க. ஏகாரத்தை மாறிக் கூட்டி, ‘தமிழ் விரகனை ஓதுவதே உறுதி’ உறுதி - என உரைக்க. ஓதுவது - துதிப்பது. உறுதி - நன்மை. உறுதி பயப்பதனை “உறுதி” என்றது ஆகுபெயர்.

1363.குறிப்புரை: இப்பாட்டு, அகப் பொருட் கற்பியலில் பரத்தையிற் பிரிவினின்றும் நீங்கிப் புதல்வற் பெற்று நெய்யாடி யிருந்த தலைவியை அணுக, அவள் ஏலாது ஊடியிருந்தமை யால், அவளது அடிமேல் வீழ்ந்து வணங்கிய அவனை அதன்பின்பும் அவள் “இதனைக் காதல் எங்கையர் காணின் நன்று” எனச் சொல்லி மறுத்த