மடக்கு, கட்டளைக் கலிப்பா
1365. | போற்றி செய்(து)அரன் பொற்கழல் பூண்டதே; | | புந்தி யான்உந்(து)அம் பொற்கழல் பூண்டதே; | | மாற்றி யிட்டது வல்விட வாதையே; | | மன்னு குண்டரை வென்றது வாதையே; | | ஆற்றெ திர்ப்புனல் உற்ற(து)அம் தோணியே; | | ஆன தன்பதி யாவ(து)அம் தோணியே | | நாற்றி சைக்கவி ஞானசம் பந்தனே; | | நல்ல நாமமும் ஞானசம் பந்தனே. | | 41 |
கைக்கிளை மருட்பா 1366. | அம்புந்து கண்இமைக்கும்; ஆன நுதல்வியர்க்கும்; | | வம்புந்து கோதை மலர்வாடும்; - சம்பந்தன் | | காமரு கழுமலம் அனையா | | ளாம்இவள் அணங்கலள்; அடிநிலத் தனவே. | | 42 |
பூங்காக்களும், பலவகைச் சோலைகளும் மதிக்கு, உருபு மயக்கம். நாம திக்கு - அச்சம் தரும் திசைகள். அச்சம், எல்லை காணப்படாது நிற்றலால் உண்டாவது, திக்கு, ‘எட்டு’ என்னும் அளவை உடைமையால், “திக்கும்” என்னும் உம்மை முற்றம்மை. பூ - பூவுலகம். இரண்டு, நான்காம் அடிகள் சீர் குறைந்து வந்தமையால் இஃது ஆசிரியத் துறையாயிற்று. 1365.குறிப்புரை: “நால் திசைக்கவி ஞானசம்பந்தன்” என்பதை முதலில் வைத்து, “எத்திசையிலும் சென்று அருட்கவிகளால் ஞானத்தைத் தொடர்பு கொள்ளச் செய்த ஆசிரியன்” - எனப் பொருள் கூறு. போற்றி செய்து பூண்டது - வாது வெல்லும் வழிகளாக அறிவால் தேர்ந்து. உந்து அம்பு ஒற்கு அழல் - ஓடுகின்ற நீரும், (வையை நீர்) எப்பொருளும் ஒடுங்குகின்ற நெருப்பும் ஆகும். “புந்தியான்” என்பதில் ஆன், மூன்றன் உருபு ‘ஒல்கு’ என்பது, ‘ஒற்கு’ எனத்திரிந்து வந்தது. ஒல்குதல் -ஒடுங்குதல். விட வாதை - நஞ்சுத் துன்பம் வென்றது வாது ஐ. ஐ இரண்டன் உருபு. இதனை ஏழன் உருபாகத்திரிக்க. “தோணி” இரண்டில் முன்னது, ஓடம்; பின்னது தோணிபுரம்; சீகாழி ‘அவனது நல்ல நாமம்’ என்க. உம்மை, ‘நால் திசைகளிலும் ஞானசம்பந்தத்தை உண்டாக்கிய தன்றி’ - என இறந்தது தழுவி நின்றது. 1366.குறிப்புரை: பல்லாற்றானும் தம்முள் ஒத்து முன்பு ஒருவரை ஒருவர் அறியாத ஒருவனும், ஒருத்தியும் ஊழ் வலியால்
|