பக்கம் எண் :

975ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்

பன்னிரு சீர்க் கழிநெடிற் சந்த விருத்தம்

1367.

 தனமும், துகிலும், சாலிக் குலையும் கோலக் கனமாடச்

சண்பைத் திகழ்மா மறையோர் அதிபன், தவமெய்க் குலதீபன்

கனவண் கொடைநீ(டு) அருகாசனிதன் கமலக் கழல்பாடிக்

கண்டார் நிறையக் கொள்ளப், பசியைக் கருதா(து) எண்பாணர்

புனைதண் தமிழின் இசைஆர் புகலிக் கரசைப் புகழ்பாடிப்

‘புலையச் சேரிக் காளை புகுந்தால்’ என்சொல் புதிதாக்கிச்

சினவெங் கதமாக் களிறொன் றிந்தச் சேரிக் கொடுவந்தார்

சேரிக் குடிலும் இழந்தார்; இதனைச் செய்குவ(து) அறியாரே.

43



தனியிடத்து எதிர்பட்டுக் கூடும் கூட்டத்திற்கு முன் தலைவனிடத்து நிகழும் துணிவுணர்வு ஆகலின் இஃது அகப்புறக் கைக்கிளையாம். “அடி நிலத்தன; கண் இமைக்கும்; நுதல் வியர்க்கும்; கோதை மலர் வாடும்; (இவையெல்லாம் தேவ மகளிர்க்கு இல்லை ஆகையால்) இவள் அணங்கு (தேவ மகள்) அல்லள்; சம்பந்தன் கழுமலம் அனையாள் ஆம்” - எனக் கூட்டி முடிக்க. “கழுமலம் நிலவுலகத்தது ஆதலின், இவளும் நிலவுலகத்திவளே” என்பதாம். காமரு - விரும்பத் தக்க. வம்பு உந்து கோதை - மணம் வீசுகின்ற மாலை இது. முன்னர் வெண்பாவாகத் தொடங்கிப் பின்னர் ஆசிரியப் பாவாய் முடிந்தமையின் மருட்பா ஆயிற்று. மருட்பாவிற்குரிய பொருள்களில் இது கைக்கிளைப் பொருள் பற்றி வந்தது. முன் பாட்டின் இறுதியில் உள்ள “சம்பந்தன்” என்பதில் முதலில் நிற்கும் சகர ஒற்றை நீக்க ‘அம்பந்தன்’ என்று ஆதலின்; இப்பாட்டு “அம்புந்து” எனத் தொடங்குவதாயிற்று.

1367.குறிப்புரை: இப்பாட்டு, ‘ஞானசம்பந்தரைத் துதிப்பவர் இம்மைப் பயனையும் அடைவர்’ என்பதைப் பாணர் சேரிப் பெண்ணொருத்தி நகைக்குங் கூற்றாக வைத்துக் கூறுகின்றது. தனம் - கைப் பொருள். துகில் - உயர்ந்த ஆடை. சாலிக் குவை - செந்நெற் குவியல். ‘இவைகளையுடைய மாடம்’ என்க. கண்டார் - கொடையாளர்களைக் கண்டவர்கள் “ஞான சம்பந்தன் கழலைப் பாடியவளெல்லாம் நல்ல உணவுகளைப் பெற்று உண்டு களிக்க, எம் சேரிப் பாணர், ‘தங்களுக்கும், தங்கள் சுற்றத்திற்கும் உள்ள பசியை எப்படித் தணிப்பது’ - என்று எண்ணிப் பாராமல்களிறு ஒன்றை இந்தச் சேரியில் கொண்டு வந்தார்; (அதனால் அவரை நான் எங்கள் குடிலுக்குள் நுழைய விடாமல் கதவை மூடித் தாழ் இட்டேன்.