இன்னிசை வெண்பா
1368. | யாரேஎன் போல அருளுடையார்! இன்கமலத் | | தாரேயும் சென்னித் தமிழ்விரகன் - சீரேயும் | | கொச்சை வயன்றன் குரைகழற்கே - மெச்சி | | அடிமைசெயப் பெற்றேன் அறிந்து. | | 44 |
இடையும், இறுதியும் கூன் பெற்று வந்த எண்சீர்க்கழிநெடிற் சந்த விருத்தம் 1369. | அறிதரு நுண்பொருள் சேர்பதி கம்அரன் - கழல்மேல் | | அணிதரு சுந்தரம் மலிதமிழ் விரகன், - பிறைதோய் | | செறிதரு பைம்பொழில் மாளிகை சுலவும் - திகழ்சீர்த் | | திருவளர் சண்பையின் மாடலை கடல்ஒண் - கழிசேர் | | எறிதிரை வந்தெழு மீன்இரை நுகர்கின் - றிலைபோய் | | இனமும் அடைந்திலை; கூர்இடரோடிருந் - தனையால்; | | உறுதுயர் சிந்தையி னூடுத வினர்எம் - தமர்போல் | | உமரும் அகன்றன ரோ? இது உரைவண் - குருகே. |
இப்போது அவர் குடிலையும் இழந்தார்; இப்பொழுது அவர் இதனை (களிற்றை) என்ன செய்வது - என்று விழித்துக் கொண்டிருக்கின்றார்” - என்பது இப்பாட்டின் திரண்ட பொருள். “எம் பாணர்” என்றதில் “பாணர்” - என்பது ஒருவரையே பலர்பாலாக உயர்த்துக் கூறியது. இவ் உயர்வுச் சொல்லும் இங்கு நகைப்பின்கண் வந்தது. “புலையச் சேரியில் காளை புகுந்தால் என்னாகும்” என்பது ஒரு பழமொழி “அந்தக்காளை உயிரோடு உரிக்கப்படும்” என்பது கருத்து. என் சொல் - என்னும் பழமொழி. ‘அதை எம் பாணர் புதுக்குவது போல, அரிசி பெற்று வாராது களிறு பெற்று வந்தார்’ எனச் சொல்லி நகையாடினாள் விறலி. ‘சின வெங்கதம்’ ஒரு பொருட் பன்மொழி. ‘சேரிக்கண்’ என ஏழாவது விரிக்க. 1368. குறிப்புரை: “இன் கமல” என்பது முதலாகத் தொடங்கி, ‘குரைகழற்கே, அறிந்து, மெச்சி அன்பு செயப் பெற்றேன்; (ஆதலின்) என்போல அருளுடையார் யாரே” - என இயைத்து முடிக்க. இது முன் இரண்டடிகள் ஒரு விகற்பமாக, ஏனையடிகள் வேறு வேறு விகற்பமாய், இரண்டாம் அடியின் மேலும்மூன்றாம் அடியில் தனிச்சொற் பெற்று வந்தமையால்இன்னிசை வெண்பா ஆயிற்று. 1369. குறிப்புரை: இப்பாட்டும், மேல் “ஆர்மலி புகலி நாதன்” எனப் போந்த பாட்டுப் போலக் காமம் மிக்ககழிபடர் கிளவியில்
|