கலித்துறை 1370. | குருகணி மணிமுன் கைக்கொடி யும்,நல் விறலவனும் | | அருகணை குவர்;அப் பால்அரி(து) இனிவழி; மீள்மின்; | | தருகெழு முகில்வண் கைத்தகு தமிழ்விர கன்றன் | | கருகெழு பொழில்மா டக்கழு மலவள நாடே. | | 46 |
கலிவிருத்தம் 1371. | நாடே றும்புகழ் ஞானசம் பந்தன்வண் | | சேடே றும்கொச்சை நேர்வளம் செய்துனை, | | மாடே றும்தையல் வாட, மலர்ந்தனை; | | கேடே றும்கொடி யாய்;கொல்லை முல்லையே | | 47 |
‘குருகோடு இரங்கல்’ - துறையாகச் செய்யப்பட்டது. “வண் குருகே” என்பதை முதலில் வைத்து, “அறிதரு சண்பையின் மாடு அலைகடலை (அடுத்த) கழி சேர் திரை வந்து எழு மீன் இரையை நுகர்கின்றிலை; போய் இனமும் (சாதியையும்) அடைந்திலை; இடலோடு இருந்தனை; (என்) சிந்தையினூடு உறுதுயர் உதவின எம் தமர்போல் உமரும் (உம்தமரும் உன்னை விட்டு) அகன்றனரோ? உரை” எனக் கூட்டி முடிக்க. மாடு - பக்கம். கூர் - மிகுந்த. ஆல், அசை. உறு துயர் - மிகுந்த துன்பம். ‘உதவினராகிய எம் தமர்’ என்க. கூன்களைச் சீராகக் கொண்டு, இப்பாட்டினை, ‘பதின்சீர்க் கழிநெடில் விருத்தம்’ என்பாரும் உளர். 1370.குறிப்புரை: இப்பாட்டு அகப் பொருள் உடன் போக்கில் தலைவனுடன் போன தலைவியைப் பின் தேடிச் செல்லும் செவிலித் தாய் நிலை கண்டோர் அவளைத் தடுத்த துறையாகச் செய்யப்பட்டது. இதன்கண் முதலில், “தாயீர்” என்பது வருவித்து, ‘இனி வழி அப்பால் அரிது; கொடியும், விறலவனும் கழுமல வளநாடு அருகு அணைகுவர்; மீள்மின்” எனக் கூட்டி முடிக்க. குருகு - வளையல். தரு கெழு முகில் வண் கை - கொடுத்தல் பொருந்திய மேகம்போலும் வண்மையையுடைய கை(யை உடைய) தமிழ் விரகன். கருகு - இருண்ட. எழு - ஓங்கிய. 1371.குறிப்புரை: இப்பாட்டு, அகப் பொருட் களவியலில் தோழி தலைவனை வரைவு கடாவுவாள் அவன் சிறைப் புறத்தானாக முல்லைக் கொடியை நோக்கிக் கூறும் முன்னிலைப் புறமொழியாகச் செய்யப்பட்டது. “கொல்லை முல்லையே” - என்பதை வளர்த்தவள் வாடிக்கிடக்க நீ மலர்ச்சி அடைகின்றாய் அதனால் கொடியாய்’ என்பது இப்பாட்டின் திரண்ட பொருள். “கோடு ஏறும் கொடியாய்”
|