பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை978

எண்சீர்க் கழிநெடிற் சந்த விருத்தம்

1372.

முல்லை நகைஉமைதன் மன்னு திருவருளை

முந்தி உறுபெரிய செந்தண் முனிவன்,மிகு

நல்ல பொழில்சுலவு தொல்லை அணிபுகலி

நாதன், மறைமுதல்வன் வேத மலையதனில்

வில்லை யிலர்;கணையும் இல்லை; பகழிஉறு

வேழம் இரலைகலை, கேழல் வினவுறுவர்;

சொல்லை இலர்,விரக ரல்லர்; தழை கொணர்வர்;

தோழி!இவர்ஒருவர் ஆவ! அழிதர்வரே.

48

வஞ்சித்துறை - அராகம்

1373.

எழில்தருபிற வியின்உறு - தொழில் அமர்துயர் கெடும்மிகு

பொழிலணி தருபுகலிமன் - எழிலிணையடி இசைமினே.

49

(இதற்குப் பின் உள்ள பாடல்கள் கிடைக்கவில்லை)

திருச்சிற்றம்பலம்


என்பது சிலேடை. கோடு ஏறுதல் - கொம்பைப் பற்றிப் படர்தல்; நன்றி மறத்தலை மிகச் செய்தல் இது கேட்டுத் தலைவன் வரைவான் ஆவது பயன். சேடு - பெருமை. கொச்சை நேர் வளம் செய்து - சீகாழி நகர்போலும் வளப்பத்தைப் பெறச் செய்து, ‘உன்னை வளம் செய்து’ என மாற்றிக் கொள்க. மாடு ஏறும் - அடிக்கடி அருகில் வந்து பழகும்.

1372.குறிப்புரை: இப்பாட்டு, அகப்பொருட் களவியற் பாங்கியிற் கூட்டத்துள், தலைவன்றனக்குக் குறைநேர் பாங்கி தலைவிக்கு அவன் குறை உணர்தல் துறையாகச் செய்யப் பட்டது. தம் நிலத்து மலையை, ‘புகலி முதல்வனது மலை’ என்கின்றாள் ஆதலின் அதற்கேற்ப, ‘வேதம் வழங்கும் மலை’ - என்றாள். “வில்லைக் கையில் உடையரல்லர்; கையில் அம்பும் இல்லை. (ஆயினும்) இவ்வழியாக அம்பு தைக்கப்பட்ட யானை சென்றதோ? கலைமான் சென்றதோ? காட்டுப் பன்றி சென்றதோ! - என இவ்வாறெல்லாம் வினவுகின்றார். இவை தவிர வேறுவகையான எந்தச் சொல்லையும் உடையரல்லர். வஞ்சிக்கும் தன்மை உடையவராய்த் தோன்றவில்லை. கையில் கொண்டு வருவதோ தழை. தோழீ! இப்படி ஒருவர் மிகவும் துன்பந் தோய்ந்தவராய்க் காணப்படுகின்றார். ஆ! ஆ! (என்ன துயர்நிலை!) எனக் கூட்டி உரைக்க. கணை, பகழி - அம்பு. இரலை - மான். கலை - ஆண். ‘இரலைக் கலை’என்பதில்