சந்திக் ககர ஒற்றுச் சந்தம் நோக்கித் தொகுக்கப்பட்டது. கேழல் - பன்றி. விரகு - இங்கு, சூழ்ச்சி “ஆவ” என்பது இரக்கச் சொல். 1373.குறிப்புரை: “மிகு - பொழில் அணி” என்பது முதலாகத் தொடங்கி உரைக்க. வழி தரு பிறவி. பின்னே பின்னே விடாது தொடர்ந்து வருகின்ற பிறவி. பிறவியின் உறு தொழில் அமர் துயர் - பிறவிகளில் பொருந்துகின்ற தொழிலில் நீங்காதிருத்தலால் வருகின்ற துன்பம். ‘இறைஞ்சுமின்’ என்பது, “இறைமின்” எனக் குறைந்து நின்றது. இனி, ‘மலர்கணை’ என ஒருசொல் வருவித்து, ‘இறைமின்’ - தூவிப் போற்றி செய்யுங்கள்’ எனவும் உரைக்கலாம். ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் முற்றிற்று
|