பக்கம் எண் :

981ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை

அருளாலே ஊட்டுதலும், அப்பொழுதே ஞானத்

திரளாகி முன்னின்ற செம்மல்; - இருள் தீர்ந்த

2. திருப்பதிகம் அருளிச் செய்தல்

காழி முதல்வன், கவுணியர்தம் போர்ஏறு,

10

‘ஊழி முதல்வன் உவன்’ என்று காட்ட வலான்



(அடி-3) தந்தையாரைக் காணாது அழுத பிள்ளையை, “பசித்தது அழுதான்” என்றது, ‘பால் தருக’ என்னும் குறிப்புத் தோன்றுதற் பொருட்டாம். குழுவிப் பருவத்துப் பிள்ளைகள் எப்பொழுது பாலை ஊட்டினாலும் மறாது உண்ணுதல் இயல்பேயாம்.

(அடி-4) ‘தொழுவான்’ என்றதும் பிள்ளையாரையே. ‘முன்னை நிலையிலும் தொழுது, இனியும் தொழுவான்’ என்றபடி.

(அடி-4) துயர் தீர்க்கும் - துயர் தீர்க்க இசைந்த. தோகை, உமாதேவி.

(அடி-4, 5) ‘முப்பத்திரண்டு அறமும் வழுவாமே செய்தாள்’ என்க.

(அடி-5, 6) “முதிராத கொங்கை” என்றது நித்திய கன்னிகை யாதலைக் குறித்தது. செப்பு - கிண்ணம். ‘கன்னிகை யாயினும் முப்பத்திரண்டு அறங்களையும் வளர்த்த அருளாலே, அழுகின்ற பிள்ளையைக் கண்டவுடனே பால் சுரக்கப் பெற்றாள்’ என்பது குறிப்பு.

(அடி-6) ‘கொங்கையை உடைய திருநுதலி’ என்க. ‘திருநுதலி’ என்பது மேற் கூறிய சொற்களின் குறிப்பால் உமாதேவியையே குறித்து. அப்பன் - இறைவன்.

(அடி-7) “அருள்” என்றது ‘ஆணை’ என்றபடி. ‘அவன் அணையின்றிச் செய்தல் கூடாமையின் அது பெற்றாள்’ என்பதாம்.

(அடி-8) திரள் - திரட்சி. “ஞானத்திரளாய் நின்ற பெருமான்”1 என்று அருளிச் செய்ததும் காண்க. இஃதே பற்றிப் பிள்ளையாரை, “ஞானத்தின் திருஉரு”2 எனச் சேக்கிழாரும் கூறினார்.

முன் நின்ற - ஞானத்தைத் திருப்பதிகங்களாகப் பரப்புதற்கு முற்பட்டு நின்ற. செம்மல் - தலைவன்; ஞானத் தலைவன்.


1.திருமுறை
2. பெரிய புராணம் - சம்பந்தர்