பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை982

3. படிக்காசு பெற்றது

வீழி மிழலைப் படிக்காசு கொண்டபிரான்;

4. சமணர் கழுவேற நின்றது

பாழி அமணைக் கழுவேற்றினான்; பாணர்

5. யாழ் மூரிப்பதிகம் பாடியது

யாழை முரித்தான்; (எரிவாய் இடும் பதிகம்

6. நெருப்பில் ஏட்டையிட்டுப் பச்சென்றிருக்கக் காட்டியது

ஆழி உலகத்(து) அழியாமற் காட்டினான்.

7. இசை வல்லான்

15 ஏழிசை வித்தகன்; (வந்(து) ஏனோரும் வானோரும்

8. பாலை நெய்தல் பாடியது

தாழும் சரணச் சதங்கைப் பருவத்தே
பாலையும் நெய்தலும் பாடவலான்; சோலைத்


இது முதலாகச் சொல்லப்படும் அற்புதங்களை யெல்லாம் பெரிய புராணத்துட் காண்க.

இருள் - புறச் சமய இருள். தீர்தல் - அவைகள் துச்சமாகத் தோன்றப் பெறுதல். “துப்புர வில்லார் துணிவு துகளாகச் சூழ்ந்தெழுந்தார்” என்னும் சேக்கிழார் திருமொழியைக் காண்க. “இருள் தீர்ந்த (அடி-9) முதல்வன்” என இயைக்க. முதன்மை - ஆசிரியத் தலைமை.

கவுணியர் - கவுணிய கோத்திரத்தார். ‘அவரிடையே வந்து அவதரித்து ஏறு’ என்க. ஏறு - ஆண் சிங்கம். பரசமய கோளரி

(அடி-10) ஊழி முதல்வன் - சிவபெருமான். ‘அவன் சுட்டிக் காட்ட ஒண்ணாதவனாயினும் சுட்டிக்காட்ட வல்லவன்’ என்க.

(அடி-11) பாழி - சமணப் பள்ளி.

(அடி-12) பாணர் - திருநீலகண்டப் பாணர்.

(அடி-14) ‘ஆழி உலகத்துக் காட்டினான்’ என்க.

(அடி-15) வித்தகன் - சதுரப்பாடு உடையவன்.

(அடி-16) தாழும் - வணங்குகின்ற. சரணம் - பாதம் பாதங்களில் சதங்கையணிதல் குழவிப் பருவத்தேயாம்.