17. முயலகன் தீர்த்தது | மழவன் சிறு மதலை வான்பெருநோய் தீர்த்த குழகன்; குலமறையோர் கோமான்; (நிலவிய |
18. ஆற்றில் எடு எதிர்ஏற விட்டது | வைகைஆற்(று) ஏ(டு)இட்டு வான்நீர் எதிர்ஓட்டும் | 35 | செய்கையான் மிக்க செயலுடையான்; (வெய்யவிடம் |
19. எலும்பைப் பெண்ணாக்கியது | மேவி இறந்த அயில் வேற்கண் மடமகளை வாவென்(று) அழைப்பித்(து) இம் மண்ணுலகில் - வாழ்வித்த சீர்நின்ற செம்மைச் செயலுடையான்; (நேர்வந்த |
(அடி-30) குழகன் - அழகன்; சிவபெருமான் நாவாய் - ஓடம், பாடவல்ல வாய். இருபொருள், ‘அது’, பகுதிப் பொருள் விகுதி. (அடி-31) உள்ளம் - ஊக்கம்; ‘திருவருள் துணை செய்யும்’ என்னும் உள்ளத்துறுதி. ஊன்றுதல், இங்கே, செலுத்துதல். (அடி-32) மழவன் - கொல்லி மழவன். “சிறுமதலை” என்பதை, ‘சிறுமிதனை’ என ஓதுதல் சிறக்கும். வான் பெரு நோய் - மிகப் பெரிய நோய். அது ‘முயலகன்’ எனப்படுவது. (அடி-33) குழகன் - அழகன்; இளம் பிள்ளை. குலம் - மேன்மை. கோமான் - தலைவன்; (அடி-36) அயில் வேல் கண் - கூர்மையான வேல் போலும் கண்களை உடைய. மடமகள் - இளம் பெண். (அடி-38) சீர் நின்ற - புகழ் நிலைபெறப் பெற்ற. (அடி-41) கொச்சை - சீகாழி. அதன்கண் தோன்றிய, சதுரப்பாடுடையவன் இவ் ஆளுடைய பிள்ளை. தன் கோமான் - அவனுக்குத் தலைவனாகிய சீகாழி இறைவன். “செய்த” என்பது ‘பாடிய’ என்னும் பொருட்டாய், “கோமானை” என்ற இரண்டாம் உருபிற்கு முடிபாயிற்று. (அடி-42) பச்சைப் பதிகம் திருநள்ளாற்றுப் பெருமான் மேலதாயினும், ‘எங்கு இருந்தும் பிள்ளையார்க்கு அருள் புரிந்தவன் சீகாழிப் பெருமானே’ என்னும் கருத்தால் அத்திருப்பதிகத்தையும், மற்றும் பல திருப்பதிகங்களையும் சீகாழிப் பெருமானுக்கு உரியவாகவே கூறினார். பா - பாடல். ‘பாவின்கண்’ என ஏழாம் உருபு விரித்து. அதனை (அடி-43) “விளைக்க வலபெருமான்” என்பதனோடு முடிக்க. வித்துப் பொருள் - ஞானத்தின் அடி நிலைப் பொருள்கள்.
|