பக்கம் எண் :

985ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை

20. புத்தன் தலையில் இடிவிழச் செய்தது

புத்தன் தலையைப் புவிமேல் புரளவித்த
40வித்தகப் பாடல் விளம்பினான்; (மொய்த்தொளிசேர்
கொச்சைச் சதுரன்; தன் கோமானைத் தான் செய்த
பச்சைப் பதிகத் துடன்பதினா றாயிரம்பா
வித்துப் பொருளை விளக்க வலபெருமான்
முத்திப் பகவ முதல்வன் திருவடியை
45அத்திக்கும் பத்தர்எதிர் ஆணைநம தென்னவலான்;
 
தத்தித் திரிபிறவிச் சாகரத்துள் ஆழாமே
பத்தித் தனித்தெப்பம் பார்வாழத் தந்தபிரான்,

21. அமணர் இட்ட தீயைப் பாண்டியன்மேல் ஏவியது

பத்திச் சிவம்’ என்று பாண்டிமா தேவியொடும்

கொற்றக் கதிர்வேற் குலச்சிறையும் கொண்டாடும்

50

அற்றைப் பொழுதத்(து) அமணர்இடும் வெந்தீயைப்

‘பற்றிச் சுடுகபோய்ப் பாண்டியனை’ என்னவல்லான்;


‘ஆளுடைய பிள்ளையார் அருளிச்செய்த பாடல்கள் பதினாறாயிரம்’ என நம்பியாண்டார் நம்பிகள் தமது பிரபந்தங்களில் குறித்துள்ளார். எனினும் இன்று கிடைத்துள்ள பதிகங்கள், விடைவாய்ப்பதிகத்தைச் சேர்த்தாலும் ‘384-தாம்’ என்பதைக் குறிப்பிட வேண்டியுள்ளது.

(அடி-44) ‘முத்திப் பேற்றை அருளுபவன் சிவபெருமானல்லது பிறர் ஒருவரும் இல்லை’ - என்பது கருத்து ஆகலின் அப்பெருமானை இங்கு, “முத்திப் பகவன்” என்றார். எனவே, “பகவன்” என்பது முகமன் உரையாக ஏனைக் கடவுளர்க்கும் பெயராதல் பெறப்பட்டது. “முத்திப் பகவ முதல்வன்” என்றதனால், முத்தியொழிந்த சிலவற்றிற்கு ஏனை யோரும் முதல்வராதலும் விளங்கும்.

(அடி-45) ‘அற்சிக்கும்’ என்பது எதுகை நோக்கி, “அத்திக்கும்” எனத் திரிந்து நின்றது, “ஆணை நமதே” என்றது, சில திருப்பதிகங்களின் திருக்கடைக்காப்புக்களில், அப்பதிகங்களுக்குச் சொல்லப்பட்ட பயன் விளைதலை உறுதி செய்தற் பொருட்டு, அங்ஙனம் சொல்லப்பட்ட பாடல்களைக் காண்க.

(அடி-47) ‘பத்திச் சிவம்’ என்று கொண்டாடும் - ‘இவர் இவ்வுலகப் பிள்ளையல்லர்; பெரியோர் பலரும் பத்திசெய்து