| வர்த்தமா னீசர் கழல்வணங்கி வாழ் முருகன் | | பத்தியை ஈசன் பதிகத்தே காட்டினான்; |
| அத்தன் திருநீல நக்கற்கும் அன்புடையான்; | 55 | துத்த மொழிக்குதலைத் தூயவாய் நன்னுதலி |
| ‘நித்தில்லப்பூண் முலைக்கும், நீண்டதடங் கண்ணினுக்கும் | | கொத்தார் கருங்குழற்கும், கோலச்செங் கைம்மலர்க்கும் |
| அத்தா மரைஅடிக்கும், அம்மென் குறங்கினுக்கும், | | சித்திரப்பொற் காஞ்சி சிறந்தபே ரல்குலுக்கும் |
60 | முத்தமிழ்நூல் எல்லாம் முழுதுணர்ந்த பிள்ளையார்க்(கு) | | ஒத்த மணம் இது என்(று)ஓதித் தமர்களெல்லாம் |
| சித்தம் களிப்பத் திருமணம் செய் காவணத்தே | | அற்றைப் பொழுதத்துக் கண்(டு)உட னே நிற்கப் |
போற்றுகின்ற சிவ பரம் பொருளே’ - என்று சொல்லக் கொண்டாடிய. (அடி-48) பாண்டிமாதேவி, மங்கையர்க்கரசியார். (அடி-49) அவர்தம் அமைச்சர் குலச்சிறையார். (அடி-52) வர்த்தமானீசர் - திருப்புகலூர்க் கோயில்களில் ஒன்றில் எழுந்தருளியிருக்கும் இறைவர். முருகன், முருக நாயனார். இவரைத் தமது திருப்பதிகத்துள் சிறப்பித்திருத்தலை அத்தலத் திருப்பதிகத்திற் காண்க. (அடி-54) அத்தன் - (சிவநெறித்) தலைவன். திருநீலநக்கன், திருநீலநக்க நாயனார். இந்நாயனாருடைய இல்லத்தில் பிள்ளையார் தம் திருக்கூட்டத் தோடும் எழுந்தருளி வழிபடப் பெற்றமையைப் பெரிய புராணத்தால் அறிக. பிள்ளையாரது திருமணச் சடங்குகளை அந்நாயனாரே செய்ததையும் அதன்கண் காண்க. (அடி-56 - 59) இப்பகுதியில் ‘பிள்ளையார்க்குத் திருமணம் செய்விப்பது’ என முடிவு செய்த அவர்தம் பெற்றோர் முதலிய சுற்றத்தார் அவருக்கு ஒத்த வகையினளாக உறுதி செய்யப் பட்ட கன்னிகைதன் அழகே குறிப்பிடப்படுகின்றது. துத்தம், ஏழிசைகளுள் ஒன்று “குதலை” என்றது இனிமை பற்றி ‘நன்னுதலியது’ என ஆறாவது விரிக்க. கோலம் - அழகு. அம் எமன் குறங்கு - அழகிய, மெத்தென்ற துடை. சித்திரம் - அழகு. காஞ்சி - இடையில் அணியும் மேகலை வகைகளில் ஒன்று. அல்குல் - பிருட்டம். நான்கன் உருபுகள் பலவற்றையும் “ஒத்த” என்பதனோடு முடிக்க.
|