| பெற்றவர்க ளோடும்போய்ப் புக்குத்தன் | 65 | அத்தன் அடியே அடைந்தான் அழகிதே. |
திருச்சிற்றம்பலம்
(அடி-60 - 65) ஓதி - சொல்லி. ‘ஓதி’ செய் காவணம்’ என்க. தமர்கள் - சுற்றத்தார்கள். காவணம் - பந்தல். “உடன் கண்டு நிற்க” என்றது சுற்றத்தாரை. பெருமணம், ‘நல்லூர்ப் பெருமணம்’ என்னும் தலம். இத்தலமே பிள்ளையார்க்கு மகட் கொடை நேர்ந்தவர் வாழ்ந்த தலமும், பிள்ளையார் இறைவனை அடைந்த தலமும் ஆகும். தன் அத்தன் - தனக்கு அம்மையைக் கொண்டு ஞானப்பாலைக் கொடுப்பித்த அப்பன்; சிவபெருமான். “ஞானத் திரளாகி முன்னின்ற செம்மல்” என்பன முதலாக, “திருநீலநக்கற்கும் அன்புடையான்” என்பது ஈறாகப் போந்த பெயர்களை எழுவாயாக வைத்து, ‘பெற்றவர்களோடும் பெருமணம் (தலம்) போய்ப் புக்குத் திருமணம் செய்காவணத்தே தமர்களெல்லாம் கண்டு நிற்கத் தன் அத்தன் அடியடைந்தான்; (இஃது) அழகிதே! என முடிக்க. ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை முற்றிற்று.
|