நம்பியாண்டார் நம்பிகள் அருளிச் செய்த 40. திருநாவுக்கரசு தேவர் திருஏகாதச மாலை சந்தவிருத்தம் திருச்சிற்றம்பலம் தனன தானத் தனதனத்தன 1375. | புலனோ டாடித் திரிமனத்தவர் | | பொறிசெய் காமத் துரிசடக்கிய | | புனித நேசத் தொடுதமக்கையர் | | புணர்வி னால்உற் றுரைசெயக்குடர் |
| சுலவு சூலைப் பிணிகெ டுத் தொளிர் | | சுடுவெ ணீறிட் டமண கற்றிய | | துணிவி னான்முப் புரமெ ரித்தவர் | | சுழலி லேபட் டிடுத வத்தினர் |
| உலகின் மாயப் பிறவி யைத்தரும் | | உணர்வி லாவப் பெரும யக்கினை | | ஒழிய வாய்மைக் கவிதை யிற்பல | | உபரி பாகப் பொருள்ப ரப்பிய |
| அலகில் ஞானக் கடலி டைப்படும் | | அமிர்த யோகச் சிவவொ ளிப்புக | | அடிய ரேமுக்(கு) அருளி னைச்செயும் | | அரைய தேவத் திருவ டிக்களே. | | 1 |
தேவர் - சுவாமிகள். ஏகாதசம் - பதினொன்று, அவ் எண்ணும் பெயர் ஆகுபெயராய் அத்துணையவாய பாடல்களைக் குறித்தது. ஏகாதச மாலை - பதினொரு பாடல்களால் ஆகிய தொடையல். ‘மாலை’ என்பதால் இதற்கு வரும்பாடல்கள் சொற்றொடர் நிலையாக அந்தாதியாய் வரும். பாட்டு:1 இதன் பொருள், உலகில் மாயப் பிறவியைத் தரும் பெருமயக்கினை - இவ்வுலகில் நிலையில்லாதனவாகிய பல பிறவிகளைத் தருவதான அந்தப் பெரிய திரிபினை.
|