பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை990

(வேறு)

தனனாதத் தனதன தனனாதத் தனதன

1376.திருநாவுக் கரசடி யவர்நாடற் கதிநிதி

தெளிதேனொத் தினியசொல் மடவார்ஊர்ப் பசிமுதல்

வருவானத் தரிவையர் நடமாடிச் சிலசில

வசியாகச் சொலுமவை துகளாகக் கருதிமெய்

உருஞானத் திரள்மனம் உருகாநெக் கழுதுகண்

உழவாரப் படைகையில் உடையான்வைத் தனதமிழ்

குருவாகக் கொடுசிவ னடிசூடித் திரிபவர்

குறுகார்புக் கிடர்படு குடர்யோனிக் குழியிலே.

2

தனந்த தனதனனா தனந்த தனதனனா

1377.குழிந்து சுழிபெறுநா பியின்கண் மயிர்நிரையார்

குரும்பை முலையிடையே செலுந்த கைநன்மடவார்



செய்யுள் நோக்கி முறை பிறழக் கூறினாராயினும், “உரை செயத் திருநீறு இட்டு அமண் அகற்றிய துணிவினால் பிணி கெடுத்துச் சுழலிலே பட்டிடு தவத்தினர்” என்பதே கருத்து என்க.

“சுழல்” என்பது ‘ஆற்றல்’ என்னும் பொருளதாய்த் திருவருளைக் குறித்தது. “தவம்” என்றது அரசுகள் சூலை நீங்கிய பின் இறுதிகாறும் மேற்கொண்டு செய்த உழவாரப்பணியைக் குறித்தது. “பெருமயக்கு” என்றது சமண சமயக் கொள்கையை.

உபரி பாகம் - முடிநிலைப் பகுதி. கடல், அமிர்தம் இவை உருவகங்கள். “திருவடிக்கள்” என்பதில் ககர ஒற்று விரித்தல்.

பாட்டு-2 ‘அடியவர்’ நாடும் கதியாகிய நீதி என்க. உர்ப்பசி - ஊர்வசி. இறுதி நாளில் தேவ கணிகையர் சிலரை நாவுக்கரசர்முன் விடுத்து மயக்கச் செய்யும் முகத்தால் அவரது உள்ளத் தூய்மையை உலகறியச் செய்த வரலாற்றைப் பெரிய புராணத்துட் காண்க.

வசி - வசப்படுத்துவன. ‘ஞானத் திரளாகிய உருமும், மனமும் நெக்கு உருகா, கண் அழுது’ எனக் கொள்க. உருகா, அழுது என்னும் வினையெச்சங்கள் “உடையான்” என்னும் குறிப்பு வினைப் பெயரோடு முடிந்தன. “குரு” என்பது ஆகுபெயராய், ‘குரு உபதேசம்’ எனப் பொருள் தந்தது. புக்கு இடர் படு - புகுந்தபின் துன்பத்திலே அகப்படுகின்ற “குடர் யோனிக் குழி” என்பது உம்மைத் தொகை. ‘திரிபவர் குழியில் குறுகார்’ என வினை முடிக்க.