| அழிந்த பொசியதிலே கிடந்தி ரவுபகல்நீ | | அலைந்த யருமதுநீ அறிந்தி லைகொல்மனமே! | | கழிந்த கழிகிடுநா ளிணங்கி தயநெகவே | | கசிந்தி தயமெழுநூ றரும்ப திகநிதியே | | பொழிந்த ருளுதிருநா வினெங்க ளரசினையே | | புரிந்து நினையிதுவே மருந்து பிறிதிலையே. | | 3 | | தனனா தந்தன தனனாதந்தன தானத் தனதன தத்தான | | |
1378. | இலைமா டென்றிடர் பரியா ரிந்திர | | னேயொத் துறுகுறை வற்றாலும் |
பாட்டு-3 முதல் அடி முழுதும் மடவாரது வருணனை. குழிந்து - ஆழமாகி - சுழி பெறு - நீர்ச் சுழியை உவமையாகப் பெறுகின்ற. நாபி - உந்தி. (அதினின்றும் எழுகின்ற) மயிர் நிரையர் - மயிர் ஒழுங்கை உடையவர். அம்மயிர் ஒழுங்கு மேலே இரு தனங்களின் இடையே செல்கின்ற. தகை - அழகு, அழிந்த பொசி - வெளிப்படும் சுரத நீர்க் கசிவு. ‘மடவாரது பொசி’ என இயைக்க. “பொசியதில்” - என்பதில் அது, பகுதிப் பொருள் விகுதி. மனமே நீ அணைந்து அயரும் அது - நெஞ்சே நீ அழுந்தி உன்னை நீ மறந்துவிடுகின்ற அந்த இழி நிலையை, நீ அறிந்திலை கொல்! (அறிந்து அதனினின்றும் நீங்க நினைந் தாயாயின்,) கழிகிடு நாள் கழிந்த - இன்று காறும் வீணே கழிந்த நாள்கள் பல போயின. (ஆயினும் இன்று தொடங்கியாவது) எழு நூறு அரும் பதிக நிதியே பொழிந்து அருளும் எங்கள் திருநாவின் அரசினையே - ஏழ் எழுநூறு திருப்பதிகங்களாகிய அருட் செல்வத்தைப் பொழிந்தருளிய எங்கள் திருநாவுக்கரசு தேவரையே, இதயம் கசிந்து புரிந்து நினை - உள்ளது உருகி விரும்பி நினை - பிறிது மருந்து இலை - (அதற்கு) வேறு மருந்து இல்லை. குறிப்பு: “ஏழ் எழுநூறுஇரும்பனுவல் ஈன்றவன் திருநாவினுக் கரையன்”1என்ற சுந்தரர் திருமொழியைக் கொண்டு “பதிகம் ஏழ் எழுநூறு பகரும் மா சிவ யோகி” என இவர் பின்பு அருளிச் செய்தலால் இங்கு, “எழு நூறு” என்றது திருப்பதிகம் “நாலாயிரத்துத்தொளாயிரம்” என்பதைப் பாடலாக வைத்துக் கொண்டாலுங் கூட, ‘பதிகம் 490’ ஆகும். ஆயினும் ‘இன்று’ கிடைத்துள்ள பதிகங்கள் - 312 தாம்’ என்பதைக் குறிப்பிட வேண்டியுள்ளது. பாட்டு-4 “திருநாவுக்கரசு” என்போர் இடர் பரியார்; “இச் செல்வம் நிலையாது” எனவே கருதுவர்; சன்மக் கடலிடையிற் புக்கு
1. திருமுறை - 7.65.2.
|