பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை992

நிலையா திச்செல்வம் எனவே கருதுவர்;

நீள்சன் மக்கட லிடையிற்புக்(கு)

அலையார் சென்றரன் நெறியா குங்கரை

யண்ணப் பெறுவர்கள் வண்ணத்திண்

சிலைமா டந்திகழ் புகழா மூருறை

திருநா வுக்கர சென்போரே.

4

தந்தத்தத் தனதன தந்தத்தத் தனதன

1379.என்பட்டிக் கட்டிய விந்தப்பைக் குரம்பையை

இங்கிட்டுச் சுட்டபி னெங்குத்தைக் குச்செலும்

முன்பிட்டுச் சுட்டிவ ருந்திககெத் திக்கென

மொய்ம்புற்றுக் கற்றறி வின்றிக்கெட் டுச்சில

வன்பட்டிப் பிட்டர்கள் துன்புற்றுப் புத்தியை

வஞ்சித்துக் கத்திவி ழுந்தெச்சுத் தட்டுவர்

அன்பர்க்குப் பற்றிலர் சென்றர்ச்சிக் கிற்றிலர்

அந்தக்குக் கிக்கிரை சிந்தித்தப் பித்தரே.

5



அலையார்; அரன் நெறியாகும் கரை அண்ணப் பெறுவார்கள் - எனக் கூட்டி முடிக்க. மாடு - செல்வம். பரியார் - சுமக்க மாட்டார். சன்மம் - பிறவி. அரன் நெறி ஆகும் கரை - இவனது நெறியாகிய ‘சைவம்’ என்னும் கரை. அண்ணுதல் - அடைதல். வண்ணச் சிலை - சந்திர காந்தக் கற்கள்.

பாட்டு-5 என்பு அட்டி - எலும்புகளை நெருங்க வைத்து “பைக் குப்பையை” என்பதை, ‘குப்பைப் பையை’ என மொழி மாற்றி உரைக்க. குப்பை - புறத்துப் போகடப்படும் பொருட் குவியல். அவற்றையுடைய பை உடம்பு. “குரம்பையை” என ஓதினால் வல்லொற்று வாராமையே யன்றிச் சந்தத்தில் ஓரெழுத்து மிகையாதலையும் நோக்குக. மேலும் உடம்பைப் பையாக உருவகம் செய்த பின்பு குரம்பையாக உருவகித்தலும் கூடாமை காண்க. தைக்கு - அணிசெய்தற்கு. தைத்தல் - அணிதல். செல்லும் - உதவும் (உடம்பின் நிலையாமை இவ்வாறு இருக்கவும்) “சில வன்பட்டிப் பிட்டர்கள் அறிவின்றிக் கெட்டு புத்தி வஞ்சித்து... எய்ச்சுத் தட்டுவர் (இன்னும்) அப்பித்தர் இவரைச் சிந்தித்து அன்பர்க்குப் பற்றிலர்; அற்சிக்கிலர்” என வினை முடிக்க.

முன்பு அருந்திக்கு எத்திக்கு என இட்டுச் சுட்டி - முதலில் தங்கள் மனத்தில், ‘கல்வியைத் தரும் திசை எந்தத் திசை’ என ஆராய்ந்து முடிவு செய்து மொய்ம்பு உற்றுக் கற்று அறிவின்றிக் கெட்டு - அம்முடிவில் உறுதியாய் நின்று பல நூல்களைக் கற்றும்