பக்கம் எண் :

993திருநாவுக்கரசு தேவர் திருஏகாதச மாலை

தத்தனன தனதான தத்தனன தனதான

1380.பித்தரசு பதையாத கொத்தைநிலை உளதேவு

பெட்டியுரை செய்துசோறு சுட்டியுழல் சமண்வாயர்

கைத்தரசு பதையாத சித்தமொடு சிவபூசை

கற்றமதி யினனோசை யிட்டரசு புகழ்ஞாலம்

முத்திபெறு திருவாள னெற்றுணையின் மிதவாமல்

கற்றுணையில் வரும்ஆதி

பத்தரசு வசைதீர வைத்தகன தமிழ்மாலை

பற்பலவு மவையோத நற்பதிக நிதிதானே.

6



அறிவில்லாமல் கேடெய்தி புத்தியை வஞ்சித்துக் கத்தி - பிறருடைய உள்ளத்தையும் குழப்பி விடும் வகையில் மிகுதியாகப் பேசி. எய்ச்சு விழுந்து தட்டுவர் - இளைத்து விழுந்து தடுமாறுவார்கள். அன்பர்க்கு - சிவனடி யாரிடத்தில். பற்று இலர் - விருப்பம் இல்லாதவர் ஆவர். அற்சிக்கிலர் - சிவனையும் வழி பட மாட்டார்.

‘அவர் திருநாவுக்கரசரை எவ்வாறு நினைவர்’ என்பது குறிப்பெச்சம். வன் பட்டிப் பிட்டர்கள் - வண்கண்மையால் மனம் போனவாறு ஒழுகும் பிட்டர்கள் (பிரஷ்டர்கள்) - சான்றோரால் விலக்கப்படுபவர்கள்.

பாட்டு-6 பித்து அரசு - அறியாமையை உடைய அரசன்: பல்லவன், பதைத்தல், இங்கு வெறுத்தலைக் குறித்தது. பதையாத - வெறுப்படையாத. அஃதாவது, ‘விரும்பிக் கொள்கின்ற’ என்பதாம். தேவு - கடவுள் பல்லவன் விரும்பிக் கொள்கின்ற கடவுள் அருக தேவன். அக்கடவுளை இங்கு, “கொத்தை நிலை உள தேவு” என்றார். கொத்தை நிலை - குருட்டு நிலைமை, ‘அறியாமை யுடைய ஓர் உயிர்’ என்றபடி. இங்ஙனம் கூறியது அகண்டப் பொருளாகச் சொல்லப்படாது கண்டப் பொருளாகச் சொல்லப்படுதல் பற்றியாம். பெட்டு - விரும்பி. இஃது இகரச் சாரியை பெற்று, “பெட்டி” என நின்றது. “சோறு” என்றது, ‘வயிற்றுப் பிழைப்பு’ என்னும் பொருளதாய் நின்றது. ‘சோறு சுட்டி உரை செய்து உழல் வாயர்’ என இயையும். “சமண் வாயர்” என்பதை “வாயராகிய சமணர்” என மாற்றிக் கொள்க. சமண் கைத்த அரசு - சமணரால் வெறுக்கப்பட்ட திருநாவுக்கரையன். அரசு புகழ் திருவாளன் - பின்பு அந்தவப் பல்லவ மன்னனே புகழ்ந்து கொண்டாடிய திருவாளன். ஞால முத்தி - சீவன் முத்தி நிலை. மிதத்தல் - இங்கு நீந்துதல். நெல் துணையின் மிதவாமல் - ஒரு நெல்லளவு தொலைவு கூட நீரில் மிதந்து நீந்தாமல். கல் துணையில் வரும் ஆதி -கல்லாகிய