தனன தானன தான தனன தானன தான 1381. | பதிகம் ஏழேழுநூறு பகருமா கவியோகி | | பரசுநா வரசான பரமகா ரணவீசன் | | அதிகைமா நகர்மேவி யருளினா லமண்மூகர் | | அவர்செய்வா தைகள் தீருமனகன் வார்கழல்சூடின் | | நிதியரா குவர்சீர்மை யுடையரா குவர்வாய்மை | | நெறியரா குவர்பாவம் வெறியரா குவர்சால | | மதியரா குவரீச னடியரா குவர்வானம் | | உடையரா குவர்பாரில் மனிதரா னவர்தாமே. | | 7 |
தெப்பத்தின் மேல் வந்து கரை ஏறிய முதல்வன்; ஆசிரியன். “சமணரால் வெறுக்கப்பட்ட அரையனும், சிவ பூசையைக் கற்ற மதியினனும், அரசு புகழ் திருவாளனும், கல் துணையில் வந்த முதல்வனும் ஆகிய அவன் வைத்துச் சென்ற தமிழ் மாலை” - என்க. அரசு வசை - தலையாய குற்றங்கள்; நூற்குற்றங்கள். “அவை பத்து” என்பது இலக்கணம். “அவைகளுள் ஒன்றும் இல்லாதபடி பாடி வைத்த தமிழ் மாலை” என்க. கனம் - பெருமை; மாட்சி, அவை, நூற்குச் சொல்லப்பட்ட அழகு பத்தும் என்க. ஓத - ஓதினால். ‘அந்நற்பதிகங்களே பின்னடிக்கு வைப்பு நிதியாய் உதவும்’ என்பதாம். தான், தேற்றப் பொருட்டு, பிரிநிலை ஏகாரத்தை, “நற்பதிகம்” என்பதனோடு கூட்டி யுரைக்க. “கைத்த” என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. பாட்டு-7 ஏழ் எழு நூறு - நாலாயிரத்துத் தொள்ளாயிரம் “பதிகம்” என்றதை, ‘பதிகப் பாடல்கள்’ எனக் கொள்ளுதல் பொருந்தும். அல்லாவிடில், ‘கிடையாது போன பாடல்கள் மிகப் பல’ எனல் வேண்டும். “பரம காரண ஈசன் அதிகை மாநகர் மேவி, அமண் மூடர் அவர் செய் வாதைகள் அருளினால் தீரும் மா கவி யோகி, பரசு நாவரசான அனகன்” என மாறிக் கூட்டுக. கவி யோகி - யோக கவி. யோகம், சிவ யோகம். பரசு - யாவராலும் துதிக்கப்படுகின்ற. அனகன் - பாவம் இல்லாதவன்; தூயவன். பரம காரண ஈசன், சிவபெருமான். ‘அவன் அருளினால்’ என்க. சீர்மை - புகழ். வாய்மை நெறி - மெய்ந் நெறி. வெறியர் - இல்லாதவர். “பாரில் மனிதர் ஆனவர் தாமே, அனகன் வார்கழல் சூடின் நிதியர் ஆதல் முதலிய பயன்களைப் பெறுவர்” என்பதாம்.
|