பக்கம் எண் :

995திருநாவுக்கரசு தேவர் திருஏகாதச மாலை

திருவடி வகுப்பு

தானனதன தனதன தனதன

1382.தாமரைநகு மகவிதழ் தகுவன

சாய்பெறுசிறு தளிரினை யனையன;

சார்தருமடி யவரிடர் தடிவன;

தாயினும்நல கருணையை யுடையன;


தூமதியினை யொருபது கொடுசெய்த

சோதியின்மிகு கதிரினை யுடையன;

தூயனதவ முனிவர்கள் தொழுவன

தோமறுகுண நிலையின; தலையின


ஓமரசினை மறைகளின் முடிவுகள்

ஓலிடுபரி சொடுதொடர் வரியன;

ஓவறுமுணர் வொடுசிவ வொளியன;

ஊறியகசி வொடுகவி செய்தபுகழ்


ஆமரசுய ரகம்நெகு மவருளன்

ஆரரசதி கையினர னருளவன்

ஆமரசுகொ ளரசெனை வழிமுழு(து)

ஆளரசுத னடியிணை மலர்களே.

8



பாட்டு:8 “ஊறிய கசிவொடு” என்பது முதலாகத் தொடங்கி உரைக்க.

“ஆம் அரசு, ஆர் அரசு, அவன் ஆம் அரசுகொள் அரசு, எனை ஆள் அரசு” - என வந்த “அரசு” அனைத்தும் திருநாவுக்கரசர் ஒருவரையே குறித்தன. அந்த அரசு தன் அடியினை மலர்கள், “தருவன, அனையன” என்பன முதலாகப் போற்றிப் புகழப்பட்டன.

தாமரை நகும் - தாமரை மலரைத் தோற்கச் செய்கின்ற. அக இதழ் - பூக்களில் உள்ள அக இதழ்கள். தகுவன - போல்வன. சாய் பெறு - நுணுகுதலைப் பெற்ற; மென்மையான. தடிவன - போக்குவன. மதி - சந்திரன். “ஒருபது” என்றது இரு திருவடிகளிலும் உள்ள நகங்களைக் குறித்.தோம் - குற்றம். குண நிலையின - குணங்கள் பலவற்றிற்கும் இடம் ஆவன. தலையின - அன்பர் பலரது தலைமேல் விளங்குவன. ஓம் அரசு - ஓங்காரத்திற்குத் தலைவன்; சிவபிரான்; “அவனை மறைகளின் முடிவுகள் ஓலம் இட்டுத் தேடுகின்ற அத்தன்மை யோடே அவைகளால் தேடி எட்ட அரியன” என்க. ஓவு அறும் உணர்வொடு சிவ ஒளியன - நீங்குதல் இயல்லாத அருள் உணர்வோடே, சிவமாகிய ஒளிப் பொருளைக் கொண்டு