தனதானத் தனதத் தனதானத் தனத் 1383. | அடிநாயைச் சிவிகைத் தவிசேறித் திரிவித்(து) | | அறியாமைப் பசுதைச் சிறியோரிற் செறியுங் | | கொடியேனுக் கருளைத் திருநாவுக் கரசைக் | | குணமேருத் தனைவிட் டெனையாமொட் டகல்விற் | | பிடியாரப் பெறுதற் கரிதாகச் சொலுமப் | | பிணநூலைப் பெருகப் பொருளாகக் கருதும் | | செடிகாயத்(து) உறிகைச் சமண்மூடர்க்(கு) இழவுற் | | றதுதேவர்க்(கு) அரிதச் சிவலோகக் கதியே. | | 9 |
விளங்குவன. ஊறிய கசிவு - சுரந்து மிகுகின்ற அன்பு. புகழ் ஆம் அரசு - புகழ் மிகுகின்ற அரசு. உளன் - உளம்; மகர னகரப் போலி. ஆர் - பொருந்துகின்ற ‘அருளால்’ என உருபு விரிக்க. அவன் ஆம் அரசுகொள் அரசு - அந்தச் சிவனே தானாம் தலைமையினைப் பெற்ற அரசு. வழி - குடி வழி. “திருநாவுக்கரசு” - என இறைவனால் சிறப்பிக்கப் பெற்ற அவர் நாவுக்கரசர் மட்டும் அல்லர்; மற்றும் பல்வேறு அரசரும் ஆவர் - என்றற்கு “அரசு, அரசு” எனப் பலவற்றைக் கூறினார். பாட்டு:9 அடி நாயை - அடிக் கீழ்க் கிடக்கும் நாய் போன்ற என்னை. இது தன்மையைப் படர்க்கை போலக் கூறியது. ‘சிவிகையில்’ என ஏழாவது விரிக்க. தவிசு - ஆசனம். இது சிவிகையில் இடப்பட்டிருப்பது. சிவிகையில் ஏறித் தவிசில் வீற்றிருந்து உலாவும் படி செய்தது, ஆசிரியத் தன்மையை எய்து வித்தமையால் ஆம். எனவே, ‘அத்தகைய பேரருளை எனக்கு வழங்கிய திருநாவுக்கரசு’ என்றவாறு. இவ்வாசிரியருக்கு நாவுக்கரசர் இத்தகைய அருளை வழங்கியது இவர் அவரை நாள் தோறும் வழிபட்டு வந்த வழிபாட்டினாலாம். ‘வழிபாட்டு வழியாகவும்’ ஆசிரியரது அருளைப் பெறுதல் கூடும்’ என்பதைப் பாரதத்துள் போந்த ‘ஏகலைவன்’ என்னும் வேடன் கதையால் அறியலாம். தெய்வங்களையும், பெரியோர்களையும் வழிபடுகின்ற வழிபாடுகட்கும் பயன் தருபவன் இறைவனே யன்றோ! அறியாமைப் பசு தை சிறியோர் - ஆணவ மலத்தின் காரியமாகிய அறியாமையாகிய பசுத் தன்மை பொருந்திய சிறியோர்கள். ‘அவர்களது கூட்டத்தில் சேர்ந்து அறியாமையில் கிடந்த கொடியேனுக்கு அருள்புரிந்த திருநாவுக்கரசு’ என்க. ஐ - தலைமையை உடைய. அஃதாவது, ‘ஆசிரியத் தன்மையை உடைய’ என்பதாம். குண மேரு - நற்பண்புகளே உருவாகிய மகாமேரு மலை. இஃது உருவகம். விட்டு - விட்டமையால் “திருநாவுக்கரசாகிய குணமேருவை அவரது பெருமையை அறிந்த பின்பும் பின்பற்றாது.
|